நானா படேகர் மறைவு: "ஒருவர் இறந்துவிட்டால் குற்றங்கள் அழிந்துவிடாது" நடிகை தனுஸ்ரீ தத்தா கருத்துக்கு வலுக்கும் கண்டனம்!

பாலிவுட் நடிகர் நானா படேக்கர் மறைவு குறித்து நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்த கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்த செய்தித் தொகுப்பு.
Tanushree Dutta Reaction on Nana Patekar Death
Tanushree Dutta Reaction on Nana Patekar Deathsource: google
1 min read

Tanushree Dutta Reaction on Nana Patekar Death

நடிகர் நானா படேக்கர் மறைவு

மூத்த பாலிவுட் நடிகர் நானா படேக்கர் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 8) அதிகாலை கோவாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு காரணமாக காலமானார்.

கோவாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு, மகாராஷ்டிர மாநில அரசு மரியாதை வழங்க, புனேவில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இறுதி சடங்குகள் நடைபெற்றன.

நடிகை தனுஸ்ரீ தத்தா எதிர்வினை

முன்னதாக மும்பையில் வசித்து வரும் நடிகை தனுஸ்ரீ தத்தா, கடந்த 2018-ஆம் ஆண்டு படப்பிடிப்பின் போது நடிகர் நானா படேக்கர் தனக்குப் பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகக் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நானா படேக்கர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில், நானா படேக்கர் மறைவு குறித்து தனுஸ்ரீ தத்தா வெளியிட்டுள்ள கருத்துக்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

"ஒருவர் இறந்துவிட்டால் அவரது குற்றங்கள் காணாமல் போய்விடாது" என்று தெரிவித்த அவர், நானா படேக்கர் மறைவுக்கு நான் என்ன ரியாக்க்ஷன் செய்வது என்று யோசித்து முடிவு எடுத்திருக்கிறேன். ஒரு நாள் முழுவதும் எனக்கு வேலைகள் இருந்ததால், அந்த வேலைகளை முடித்துவிட்டுத்தான் பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன்.

ஒரு கெட்ட மனிதன் இறந்துவிட்டதற்கு ஊடகங்கள் இவ்வளவு ஆர்வமாக இருப்பதைப் பார்த்து வருத்தமாக இருந்தேன். அவருடன் உலகத்திற்கு வேறு விதமான அனுபவங்கள் கிடைத்திருக்கலாம்; ஆனால், எனது அனுபவம் எனக்குத்தானே தெரியும்.

இறந்துவிட்டாலும் குற்ற செயல்கள் முற்றிலும் அழிந்துவிடாது

இறந்துவிட்ட பிணங்களைத் தோண்டி எடுக்க நானும் விரும்பவில்லை. அதனால் எனது கருத்துகளை தனிப்பட்ட முறையில் வைத்திருந்தேன். ஆனால், ஒருவர் இறந்துவிட்டாலும் அவர் செய்த குற்றச் செயல்கள் முற்றிலும் அழிந்துவிடாது.

நானா படேக்கர் யாருக்கெல்லாம் பாலியல் தொல்லை கொடுத்தாரோ அதெல்லாம் முடிந்துவிடுமா? கடவுள் கூட மன்னிப்புக் கேட்காதவரை மன்னிப்பதில்லை. முதலில் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேளுங்கள். கொடூரன் இறந்துவிட்டான் என்பது என்னுடைய எதார்த்தம்.

2018-க்குப் பிறகு எனக்கு மிகவும் கடினமான காலமாக இருந்தது. நான்கு நாட்கள் கூட என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. என் வாழ்க்கையில் தொடர் தாக்குதல்கள் நடத்தினார்கள். நேர்காணல்களில் நான் கூறியவை எல்லாம் மிகச் சிறிய பகுதிகள் தான். 2018 முதல் நான் தினமும் கஷ்டப்பட்டேன்.

குறிப்பாக 2020-க்குப் பிறகு தினமும் அவரால் கஷ்டத்தை அனுபவித்தேன். அவர் தனியாக என்னை தொல்லைப்படுத்தவில்லை, ஒரு கூட்டத்துடன் சேர்ந்து செய்தார். அவர் என் வாழ்க்கையின் மிகப்பெரிய பூதம். என் வாழ்க்கையை நரகமாக்கியவர் என்று தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.

திரையுலக அமைப்பின் கண்டனம்

நானா படேக்கர் மறைவின் போது தனுஸ்ரீ தத்தா தெரிவித்த இந்த கருத்துக்களுக்கு அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் (AICWA) உள்ளிட்ட திரையுலக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in