விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்: ஜூலை 24-ல் வெளியீடா?

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், படம் ஜூலை 24-ல் வெளியாகும் என விநியோகஸ்தர் அறிவிப்பு.
Thalapathy Vijay Jananayagan Movie A Certificate Release Date July 24
Thalapathy Vijay Jananayagan Movie A Certificate Release Date July 24google,ai
1 min read

Distributors have announced that the film 'Jananayagan', starring Vijay and directed by H. Vinoth, will be released on July 24, following the receipt of an 'A' certificate.

தமிழக முதல்வர் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை மற்றும் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் ‘ஜனநாயகன்’

இத்திரைப்படத்தை முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ளார்.'ஜனநாயகன்' படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

தணிக்கைச் சிக்கலும் ‘ஏ’ சான்றிதழும்

இத்திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் சில காட்சிகள் காரணமாக, மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்திடம் (CBFC) சான்றிதழ் பெறுவதில் கடந்த சில மாதங்களாக பெரும் சிக்கல் நீடித்து வந்தது. இதன் காரணமாகவே படம் திட்டமிட்டபடி வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், அனைத்துச் சிக்கல்களும் முடிவுக்கு வந்துள்ள சூழலில், தணிக்கை வாரியம் இத்திரைப்படத்திற்கு ‘ஏ’ (A - Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஜூலை 24-ல் ரிலீஸ்? விநியோகஸ்தர் அறிவிப்பு

தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 24-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என கனடாவைச் சேர்ந்த பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான 'யார்க் சினிமாஸ்' (York Cinemas) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு?

இருப்பினும், படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தரப்பிலிருந்து இந்த வெளியீட்டு தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in