

Tickets selling for ரூ.1,600? ‘Jananayagan’ FDFS buzzes with excitement; ban on excess charges in Tamil Nadu!
தமிழக முதலமைச்சர் விஜய் திரையுலகில் இருந்து முழுமையாக விலகுவதற்கு முன்பாக, அவர் கடைசியாக நடித்த திரைப்படம்.
'ஜனநாயகன்' பல தடைகளைக் கடந்து தற்போது உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஜூலை 23 ஆம் தேதி திரைக்குவர உள்ளது.
தளபதி விஜயின் கடைசி படம் என்பதால் திரையரங்குகளில் அவரது படத்தைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.
கர்நாடகாவில் ஜனநாயகன்
தமிழகத்தில் தியேட்டர்களில் அதிகாலை காட்சிகள் திரையிட அனுமதி இல்லாததால், காலை 9 மணிக்குத்தான் முதல் காட்சி தொடங்குகிறது.
ஆனால், அண்டை மாநிலமான கர்நாடகாவில் காலை 6 மணிக்கே முதல் நாள் முதல் காட்சி (FDFS) திரையிடப்படுகிறது.
தமிழகத்திற்கு முன்பே கர்நாடகாவில் படம் வெளியாவதால், சில தீவிர தமிழக ரசிகர்கள் பெங்களூருக்கே சென்று படம் பார்க்க டிக்கெட் வாங்கியுள்ளனர்.
டிக்கெட் விலை நிலவரம்
பெங்களூரின் முக்கிய பகுதிகளில் உள்ள பிரபல திரையரங்குகளில் காலை 6 மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அங்கு ஒரு டிக்கெட் ரூ.800 முதல் ரூ.1,600 வரை விற்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான தியேட்டர்களில் ரூ.1,000 மற்றும் ரூ.800 என நிர்ணயிக்கப்பட்ட போதிலும், விஜய் அண்ணாவிற்காக கொடுப்போம் எனும் விதமாக ரசிகர்கள் கணக்கு பார்க்காமல் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.
தமிழக தியேட்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவுகள்
பெங்களூரில் டிக்கெட் விலை எகிறியதைக் கண்டு ரசிகர்கள் வியந்தாலும், தமிழக ரசிகர்களுக்கு முதலமைச்சர் விஜய்யின் அரசிடம் இருந்து தியேட்டர்களுக்கு இரண்டு மிக முக்கியமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
டிக்கெட் விலை ஏறக்கூடாது
"இது ஊழலை ஒழிக்கும் ஆட்சி. எனவே, ‘ஜனநாயகன்’ ரிலீஸ் விஷயத்தில் டிக்கெட் விலையை எக்காரணம் கொண்டும் ஏற்றக் கூடாது.
அரசு நிர்ணயித்த விலைக்கு மட்டுமே டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டும்" என்று தமிழக திரையரங்குகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக ரசிகர்கள் நியாயமான விலையில் படம் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
மைனர்களுக்கு தடை
இப்படம் 'ஏ' (A - Adults Only) சான்றிதழ் பெற்ற படம் என்பதால், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் படம் பார்க்க முடியாது.
"விஜய் மாமாவை பார்க்கப் போகிறோம்" என்று மைனர்கள் அல்லது குழந்தைகள் யாரும் தியேட்டருக்கு வந்தால், அவர்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஏ சான்றிதழ் படத்தை குழந்தைகள் பார்த்து வீடியோ வெளியாகி சர்ச்சையானது போல, தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய்யின் படத்திற்கு அத்தகைய சர்ச்சை வந்துவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
லீக் ஆனாலும் குறையாத மவுசு
முன்னதாக, 'ஜனநாயகன்' திரைப்படம் ஆன்லைனில் கசிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இணையத்தில் கசிந்த இப்படத்தை சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தாலும், தியேட்டரில் வந்து படம் பார்க்க ரசிகர்கள் காட்டும் ஆர்வம் துளியும் குறையவில்லை.
"தளபதியின் கடைசி படம் பாக்ஸ் ஆபீஸில் எப்படிப்பட்ட பிரம்மாண்ட வசூல் சாதனை படைக்கப் போகிறது என்பதை மட்டும் பொறுத்திருந்து பாருங்கள்" என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
=====