உலக சினிமாவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ : கொண்டாடும் ரசிகர்கள்

உலக சினிமாவில் டாப் 10 வரிசையில் தமிழ் படமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, இடம் பிடித்து அசத்தி இருக்கிறது.
tourist family movie gets world wide reocgnition
Tourist Family Movie in World top 10
1 min read

உலகளவில் அங்கீகாரம் :

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திற்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்ததிருக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் 50 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி வரவேற்பை பெற்றது.

குடும்ப படங்களுக்கு வரவேற்பு :

தற்போதைய சூழலில் குறைந்த பட்ஜெட்டில் வெளியான படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு பிளாக் பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. அந்த வகையில், குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட், ஃபேமிலி, குட் பேட் அக்லி போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன.

பெரிய பட்ஜெட்டில் வெளியான கேம் சேஞ்சர், ரெட்ரோ போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தன. குறைந்த பட்ஜெட்டில் வெளியான படங்கள் கோடி கணக்கில் வசூலை ஈட்டி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன

டூரிஸ்ட் ஃபேமிலி :

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல் என பலரும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் ரூ. 91 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

டாப் 10ல் 9ம் இடம் :

குடும்பங்கள் கொண்டாடும் படத்தையே ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்தநிலையில், உலகளவில் உள்ள சினிமா விமர்சகர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்யும் முன்னணி தளம் Letterboxd. இந்த தளத்தில் 2025ல் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் டாப் 10 குறித்த பட்டியல் வெளியிட்டுள்ளது.

கொண்டாடும் ரசிகர்கள் :

இதில், சின்னர்ஸ் திரைப்படம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. டாப் 10ல் 9ஆவது இடத்தை தமிழ் திரைப்படமான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் இடம் பிடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் இடம்பிடித்த ஒரே படம் இது மட்டுமே.

தமிழ் மக்கள் கொண்டாடி தீர்த்த நிலையில், உலக அரங்கிலும் நன்மதிப்பை பெற்றிருப்பதால் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in