கிளாசிக் காதல் படங்கள் ரீ-ரிலீஸ்: உற்சாகத்தில் 90’s Kids!

VALENTINE'S DAY SPECIAL: காதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படும் சில கிளாசிக் படங்கள் தான் காதலர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
valentines day special Classic romantic films re-release
valentines day special Classic romantic films re-releasesource:google
2 min read

VALENTINE'S DAY SPECIAL RE-RELEASE MOVIES LIST 2026:

பிப்ரவரி மாதம் வந்துவிட்டால் போதும் அதுவும் பிப்.14 ஆம் தேதி சொல்லவே வேண்டாம் காதலர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். காதலர் தினத்தன்று பிரத்யேகமாக காதல் திரைப்படங்கள் வெளியாவதுண்டு.

ரீ-ரிலீஸ் படங்கள்

அந்த வகையில் இந்த ஆண்டும் புதுப்படங்கள் வெளியாக உள்ளன. இருப்பினும் தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படும் சில கிளாசிக் படங்கள் தான் காதலர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு திரைப்படங்களின் லிஸ்ட் இதோ உங்களுக்காக...!

காதல் படங்கள் என்றாலே எண்பது, தொண்ணூறு காலகட்டம் தான் என்னும் அளவிற்கு அந்த காலகட்டத்தில் அத்தனை கிளாசிக் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.

அந்த வரிசையில் காதல் கடிதம் எழுதிக்கொண்டிருந்த ஒரு தலைமுறைக்கு இணைய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

காதலர் தினம்

இணையம் மூலமாக காதலிக்க தொடங்குகிறார்கள். மெசேஜ், சாட் என காதலும், இணையமும் சேர்ந்தே வளர்க்கிறது. ஆம், காதலர் தினம் திரைப்படம் தான் பிப். 14 ஆம் தேதி வெளியாகிறது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு

1999 ஆம் ஆண்டு இயக்குநர் கதிர் இயக்கத்தில், நடிகர் குணால்,சோனாலி நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட திரைப்படம் காதலர் தினம். கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் ஆன பின்னும் இன்றளவும் பேசப்படும் காதல் கிளாசிக் திரைப்படம்.

இசையமைப்பாளர் இசைப்புயல்

காதல் என்ற உணர்வு அந்தந்த தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் மாறிக்கொண்டே வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட். இன்றும் இந்த பாடலை கேட்காத இளைஞர்களே இருக்க மாட்டார்கள் எனலாம்.

தாண்டியா ஆட்டமும் ஆட, ஓ மரியா பாடல் அனைவரையும் துள்ள வைக்கும். கவிஞர் வாலியின் ’காதலெனும் தேர்வெழுதி’ பாடலின் வரிகள் இன்றளவும் காதலர்களின் தேசிய கீதமாகவே உள்ளது எனலாம்.

மின்னலே

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மாதவன், ரீமாசென், அப்பாஸ் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியாகி இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட படம் மின்னலே.

இந்த திரைப்படம் தான் இயக்குநர் கெளதம் மேனனுக்கும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்க்கும் முதல் படம். வெற்றிபடம்.

திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். வணிக ரீதியாகவும் படம் மாபெரும் ஹிட்.

25 ஆண்டுகளுக்கு பிறகு

கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி மின்னலே திரைப்படம் வெளியானது.

இப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

காதலில் தோல்வி, அல்லது காதலர்களுக்குள் வருத்தம் என்றால் இன்றளவும் காதலர்களின் விருப்பத் தேர்வாக இருப்பது இத்திரைப்படத்தின் ‘வெண்மதி வெண்மதியே நில்லு’பாடல் தான்.

மெளனம் பேசியதே

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா,லைலா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மெளனம் பேசியதே.

இத்திரைப்படத்தில் சூர்யாவின் வசீகர கண்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

ஹிட் வசனம்

இந்த திரைப்படத்தில் வரும் ‘திடீர்னு எங்க இருந்துடா வருது இந்த லவ்வு’ என்பது போன்ற வசனங்கள் ஒவ்வொன்றும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

மெளனம் பேசியதே திரைப்படம் தற்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு காதலர் தினத்தை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

90’s Kids உற்சாகம்

காதலர் தினத்தை முன்னிட்டு கிளாசிக் காதல் திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது காதலர்களை விட 90’s Kids தான் அதீத மகிழ்ச்சியில் உள்ளனர் என்றே சொல்லலாம்.

தியேட்டரில் தவறவிட்டவர்கள் தற்போது திரையரங்குகளில் கண்டு மகிழ போகதாகவும் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in