

சிறுமிக்கு விருந்து வைத்த விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா!
Vijay Deverakonda and Rashmika Host a Feast for a Little Girl : விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா தங்களது திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என வருந்திய சிறுமியை வீட்டிற்கு அழைத்து விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதி விருந்து வைத்து உபசரித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம்
VIROSH திருமணம் வைரல்
கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் உதய்பூரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள், வீடியோக்கள்,இவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்துகள் முதலானவை தான் இணையத்தில் வைரலாகி இருந்தது.
திருமணத்திற்கு ஏன் அழைக்கவில்லை? சிறுமி வருத்தம்
அப்போது இன்ஸ்டகிராமில் ஒரு சிறுமி ஏன் என்னை திருமணத்திற்கு நீங்கள் அழைக்கவில்லை என விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவை மழலைக் குரலில் கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.
விஜய் தேவரகொண்டா கமெண்ட்
இந்த பதிவிற்கு விஜய் தேவரகொண்டா, விரைவில் உன்னை வீட்டிற்கு அழைக்கிறேன். உனக்கு என்ன பிடிக்கும் சொல் என கமெண்ட்டில் பதிவிட்டிருந்தார்.
சொன்னதைச் செய்த VIROSH தம்பதி
சொன்னதைப்போலவே தற்போது விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும், திருமணத்திற்கு அழைக்கவில்லை என வருந்திய அச்சிறுமியை அழைத்து, அவருக்கு பிடித்தமான இனிப்பு வகைகள், உணவுகள் முதலானவற்றோடு விருந்து பரிமாறியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக ராஷ்மிகா மந்தனா அச்சிறுமிக்கு இனிப்பு பரிமாறி நெற்றியில் முத்தமிடுகிறார். விஜய் தேவரகொண்டா அச்சிறுமிக்கு உணவு பரிமாறுகிறார். இறுதியில் அச்சிறுமியை ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் தூக்கி வைத்து கொஞ்சுகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவை நெகிழ்ச்சிப்பட பாராட்டி வருகின்றனர். மேலும் அச்சிறுமியை கொடுத்த வைத்த குழந்தை என்றும் பாராட்டி வருகின்றனர்.
திருமணம் முடிந்த கையோடு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா தம்பதி பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்கள், கோவில்கள், முக்கிய இடங்களில் திருமண விருந்து மற்றும் பழரசம் முதலானவறை கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
======