வெளியான விஜயகாந்த் மகனின் முதல் பாடல்- அப்டேட் கொடுத்த படக்குழு!

Kombuseevi Movie : தமிழ் திரையுலகின் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் நடிகர் விஜயகாந்த். அவர் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்த முதல் படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Vijayakanth Son Shanmuga Pandian Kombuseevi Movie First Single Video Song Release Update Director Ponram Film in Tamil
Vijayakanth Son Shanmuga Pandian Kombuseevi Movie First Single Video Song Release Update Director Ponram Film in Tamilimage courtesy-sareegamapa iamge kombuseevi movie
1 min read

இயக்குநர் பொன்ராம் வெற்றி படங்கள்

Kombuseevi Movie First Single Video Song Update : தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமைமிக்க இயக்குநர் பொன்ராம். இவரின் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாகவும், நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த கட்ட வளர்ச்சி பாதைக்கு மிகவும் ஒரு முக்கிய பயணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

விஜயகாந்த் மகனின் படம்

இந்நிலையில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இந்தப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்திற்கு எதிர்பார்ப்பு

இப்படம் 1996 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இதற்கு தமிழகத்தில் அல்லாது தென்தமிழகத்தில் இப்படத்தினை எதிர்பார்த்து திரைரசிகர்கள் மட்டுமல்லாது நடிகர் விஜயகாந்த் ரசிகர்களும் அவர் மகனின் படத்திற்கு ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க : Bison Review: பைசன் படம் இதுதானா? இத பாத்துட்டு போய் படம் பாருங்க!

தொடர் அப்டேட்டில் படக்குழு

இந்நிலையில், கொம்பு சீவி படக்குழு தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து கொண்டு இருக்கிறது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. மேலும் படம்குறித்த பல வித சுவாரசிய தகவல்கள் சினிமா ரசிகர்களுக்கு இடையே உலாவி கொண்டிருக்கும்போது படக்குழுவின் அடுத்த அப்டேட்டாக 'கொம்புசீவி' படத்தின் முதல் சிங்கிளான 'உன்ன நான் பாத்த' பாடல் இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், "கொம்புசீவி" படத்தின் முதல் பாடலான "உன்ன நான் பாத்த" பாடல் வெளியான ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் பார்வையாளர்களை கடந்துள்ளது. யுவனின் இசையில் வெளிவந்துள்ள இந்த பாடலுக்கு யுவுன் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in