"ஜனநாயகன்" மறு தணிக்கை சான்றிதழ் : காய்ச்சலால் மீண்டும் சிக்கல் : ஏமாற்றத்தில் ரசிகர்கள்

விஜயின் கடைசி படமான ஜனநாயகன்,சென்சார் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் சூழலில்,தணிக்கைக்குழுவில் ஒருவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக சான்றிதழ் வழங்கும் முடிவை மார்ச் 17 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Vijay's last film, Janyayan, facing censor issues, decision  issue censor certificate has been postponed to March 17
Vijay's last film, Janyayan, facing censor issues, decision issue censor certificate has been postponed to March 17 google
1 min read

விஜயின் ‘ஜனநாயகன்’

Jana Nayagan Movie Censor Issue Update in Tamil : தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் அதிர்வுகளை ஏற்படுத்திய நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன், சென்சார் பிரச்னையில் சிக்கித் தவித்து வருகின்றது . எச். வினோத் இயக்கத்தில் உருவாகின இந்தப் படம், அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் படமாக எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்பில் ஜனநாயகன்

ஒருவேளை படத்திற்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அதுவே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக மாறிவிடும் என திரையுலகினர் கருது தெரிவித்து வர்கின்றனர்.

விஜயின் முதல் அரசியல் ஆயுதமாக ‘ஜனநாயகன்’ பார்க்கப்படுவதால், தணிக்கைக் குழுவின் ஒவ்வொரு அசைவும் விஜய் ரசிகர்களையும், தமிழக மக்களையும் உன்னிப்பாகக் கவனிக்க வைக்கிறது

தள்ளிப் போகும் தணிக்கை

ஏற்கனவே ஜனநாயகனுக்கு தணிக்கையானது தள்ளி போன நிலையில் அந்த 120 நிமிடங்களில், தமிழ் சினிமாவில் புதிய வரலாறு படைக்குமா அல்லது அதிகாரத்தின் பிடியில் சிக்கித் தவிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஏமாற்றத்தில் ஜனநாயகன்

அதன்படி இன்று அறிவிப்பு வெளியாகும் என்று இருந்த நிலையில் அதனை ஒத்திவைத்து மாற்று தேதியை மீண்டும் அறிவித்துள்ளது தணிக்கை குழு

காய்ச்சலால் தள்ளிப்போன தணிக்கை

விஜயின் கடைசி படமான ஜனநாயகன், சென்சார் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் சூழலில் ,தணிக்கைக்குழுவில் ஒருவர்க்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக தணிக்கை சான்றிதழ் மார்ச் 17 ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது

ரசிகர்களுக்கு ஏமாற்றம்

இன்று படத்திற்கு தணிக்கை வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in