"உங்க அப்பா என்னை கடத்திட்டாரு!" இணையத்தை கலக்கும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வீடியோ!

ஜேசன் சஞ்சய் வைரல் வீடியோ: "உங்க அப்பா என்னை கடத்திட்டாரு" - ஜெமினி மணி மகன் உரையாடல்!
Viral video of actor Vijay's son, Jason Sanjay.
Viral video of actor Vijay's son, Jason Sanjay.google, Ai
1 min read

தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்

தமிழக முதல்வர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், நடிகர் ஜெமினி மணியின் மகனிடம் தனது சிறுவயது 'கடத்தல்' நினைவைப் பகிர்ந்து கொண்ட கியூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் சஞ்சயின் வீடியோ

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் மகனும், கோலிவுட்டில் அறிமுக இயக்குநராக களமிறங்க உள்ள ஜேசன் சஞ்சய், சிறுவன் ஒருவனுடன் கலகலப்பாகப் பேசும் பிரத்யேக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுவயது சுவாரசிய நினைவு

அந்த வீடியோவில், நடிகர் ஜெமினி மணியின் மகனிடம் சஞ்சய் பேசுகிறார். அப்போது, "உங்க அப்பா என்னை ஸ்கூல்ல இருந்து அப்படியே கடத்திக்கொண்டு போயிட்டாரு" என்று சிரித்தபடியே தனது சிறுவயது சுவாரசிய நினைவை அந்தச் சிறுவனுடன் பகிர்ந்து கொள்கிறார்.

பின்னணியில் உள்ள சுவாரசியக் கதை

நடிகர் ஜெமினி மணி என்பவர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். முன்பு ஒருமுறை விஜய்யைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில், சஞ்சய் படிக்கும் பள்ளிக்கு அவர் சென்றுள்ளார்.

அப்போது சஞ்சய்யை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விஜய் அங்கு வந்திருந்தார். சஞ்சய்யைக் கண்டதும், ஜெமினி மணி அவரைத் தூக்கிக்கொண்டு விஜய் கார் இருக்கும் இடத்தை நோக்கி ஓடியுள்ளார்.

அப்போது ஜெமினி மணி யார் என்று அங்கிருந்தவர்களுக்குத் தெரியாததால், ஏதோ கடத்தல் நடப்பதாக நினைத்து சத்தமிட்டுள்ளனர்.

சஞ்சய்யும், "அப்போது அவரை எனக்கு யாரென்றே தெரியாது. தெரியாத ஒருவர் நம்மைத் தூக்கிக்கொண்டு ஓடினால் பயம் வருமா, வராதா? நான் அப்போது பயந்துவிட்டேன்" என்று மழலைத் தனத்தோடு அந்த சிறுவனிடம் விளக்குகிறார்.

அதன் பின்னர், ஜெமினி மணி சஞ்சய்யை காரில் அமரவைத்துவிட்டு, தான் விஜய்யின் ரசிகர் என்று அவரிடம் பேசியுள்ளார்.

ஜேசன் சஞ்சய் படத்தில் ஜெமினி மணி

விஜய்யின் தீவிர ரசிகரான ஜெமினி மணியை, சஞ்சய் தற்போது தான் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

படப்பிடிப்பு தளத்திற்கு ஜெமினி மணி தன் மகனை அழைத்து வந்தபோதுதான், எந்தவித பந்தாவும் இல்லாமல் சஞ்சய் அச்சிறுவனுடன் இந்த பழைய நினைவைப் பகிர்ந்துள்ளார். இவர்களின் இந்த அன்பான உரையாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in