”நாங்கள் மூவர் ஆகிவிட்டோம்”!அந்த மூன்றாவது நபர் யார்? "Virosh" தம்பதியின் வைரல் பதிவு: குழப்பத்தில் ரசிகர்கள்!

ராஷ்மிகா தனது பதிவில் ராஷ்மிகா ரு என்கிற தனது மற்றொரு இன்ஸ்டாகிராம் பக்கத்தையும், டெரிப்லி டைனி போஸ்ட் என்கின்ற கணக்கையும் டேக் செய்துள்ளார்.
"We have become three!" Is Rashmika pregnant? Fans left confused!
"We have become three!" Is Rashmika pregnant? Fans left confused! source : google
1 min read

"We have become three!" Is Rashmika pregnant? Fans left confused!

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்

நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தான் தென்னிந்தியத் திரையுலகின் புதுமணத் தம்பதிகள்.

கடந்த பிப்ரவரி மாதம் உதய்பூர் அரண்மனையில் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, தற்போது ஒரு புதிய சமூக வலைதளப் பதிவின் மூலம் இணையதளத்தையே அதிரவைத்துள்ளனர்.

நாங்கள் இப்போது மூன்று பேர் - ராஷ்மிகாவின் வைரல் பதிவு

விரோஷ் தம்பதிக்கு திருமணமாகி ஒன்றரை மாதங்களே ஆன நிலையில், நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்கள் இப்போது மூவர் என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

இதில் ஒரு கார்டூன் வீடியோவுடன், விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் ஒரு பூ போன்ற கிராபிக்ஸ் டிசைனும் இடம் பெற்றுள்ளது.

ஜூனியர் விரோஷ் வருகிறாரா?

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், ஜூனியர் விரோஷ் வருகிறாரா? அல்லது ராஷ்மிகா கர்ப்பமாக இருக்கிறாரா? என கமெண்ட் பக்கத்தில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

சமீபகால ட்ர்ரெண்டிங்

சமீபகாலமாக திருமணத்திற்குப் பிறகு உடனடியாகத் தாய்மையடைவதை அறிவிக்கும் போக்கு அதிகரித்து வருவதால், ரசிகர்களின் ஆர்வமும், சந்தேகமும் அதிகரித்துள்ளது.

உண்மை என்ன? - பின்னணித் தகவல்

ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தாலும், ராஷ்மிகாவிற்கு நெருக்கமான வட்டாரம் இந்த விஷயத்தின் பின்னணியில் உள்ள உண்மை வேறு என்கிறது.

ராஷ்மிகா தனது பதிவில் ராஷ்மிகா ரு என்கிற தனது மற்றொரு இன்ஸ்டாகிராம் பக்கத்தையும், டெரிப்லி டைனி போஸ்ட் என்கின்ற கணக்கையும் டேக் செய்துள்ளார்.

நினைவுகளை சேமிக்கும் வலைதளப் பக்கங்கள்

தனது முக்கிய நினைவுகளையும், பயனுள்ள தகவல்களையும் ஒரு நாட்குறிப்பு போலப் பகிர்ந்து கொள்ளவே அந்தப் பக்கத்தைப் அவர் பயன்படுத்தி வருகிறார்.

தற்போது இந்த ஜோடி தங்களது தேனிலவை முடித்துவிட்டு, ரனபலி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர்.

தாய்மை குறித்த அறிவிப்பு அல்ல

எனவே இந்தப் பதிவு ராஷ்மிகாவின் தாய்மை குறித்த அறிவிப்பு அல்ல, அது ஒரு சாதாரணமான பதிவு அல்லது ஒரு புதிய முயற்சியைக் குறிக்கும் பதிவு மட்டுமே எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த மூன்றாவது நபர் யார்?

எனவே, ராஷ்மிகா ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், அது குழந்தை பற்றிய செய்தி அல்ல என்பது தற்போதைய நிலவரமாகும். இருப்பினும், இந்த மூன்றாவது நபர் யார் என்கிற மர்மம் இன்னும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in