

பொதுத்துறை வங்கிகளில் காலி பணியிடங்கள்
IBPS RRB Recruitment 2025 Notification : SBI வங்கியை தவிர்த்து நாட்டில் உள்ள 11 பொதுத்துறை வங்கிகளில் நிலவும் காலிப் பணியிடங்களை ஐ.பி.பி.எஸ் ( IBPS ) எனப்படும் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு நாடு முழுவதும் காலியாக இருந்த 10 ஆயிரத்து 277 கிளர்க் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் முதல்நிலைத் தேர்வு நிறைவடைந்தது.
கூடுதலாக 3,256 காலியிடங்கள்
இந்நிலையில், கூடுதலாக 3 ஆயிரத்து 256 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 533 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்திற்கான பணியிடங்கள் அதிகரிப்பு
தமிழ்நாட்டிற்கான காலிப்பணியிடம் 894-ல் இருந்து ஆயிரத்து 161 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் கிளர்க் பணிக்கான காலியிடங்கள், 2,346 ஆக உயர்ந்து இருக்கிறது. மேற்கு வங்கத்தில் காலிப்பணியிடங்கள் 992 ஆகவும், பிகாரில் 748 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நவ.29ல் முதன்மை தேர்வு
முதல்நிலை எழுத்து தேர்வு நிறைவுபெற்ற நிலையில், ஒரு பணியிடத்திற்கு 10 பேர் வீதம், அடுத்தக்கட்டமான முதன்மைத் தேர்வு நடைபெறும். நவம்பர் 29ம் தேதி முதன்மைத் தேர்வு நடைபெறும் என்று ஐபிபிஎஸ் அறிவித்துள்ளது. கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதால், இந்த ஆண்டு அதிக இளைஞர்கள் பொதுத்துறை வங்கிகளில் வேலை வாய்ப்பினை பெறுவார்கள்.
======