”85 பதக்கங்கள் - 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம்” : ஆசிய விளையாட்டில் சாதித்த இந்தியா, பட்டியலில் 4வது இடம்..!

ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் சிறப்பா நிறைவடைஞ்சி இருக்கு, இந்தியா 85 பதக்கங்களை குவித்து சாதிச்சு இருக்கு.
20th Asian Games concluded successfully, India achieved  by amassing 85 medals
20th Asian Games concluded successfully, India achieved by amassing 85 medalssource:thamizhalai,ai generated
3 min read

0வது ஆசிய விளையாட்டு போட்டிகள்

ஜப்பானோட அய்சி-நாகோயாவில, இரண்டு வாரங்களா நடைபெற்ற 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகமா நிறைவடைஞ்சன. . செப்டம்பர் 19ம் தேதி தொடங்கிய போட்டிகளில், இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 46 நாடுகள் கலந்து கிட்டன.

36 போட்டிகளில் பங்கேற்ற இந்தியா

இந்தநாடுகளை சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் 43 வகையிலான போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினாங்க.

இந்தியா சார்பில் மொத்தம் 503 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 36 வெவ்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் கலந்து கிட்டாங்க.

இந்தியாவின் பதக்க வேட்டை

வீரர், வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டம், வெண்கலம், வெள்ளி, தங்க பதக்கங்கள் என ஆசிய நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தது ஆசிய விளையாட்டு போட்டி.

இந்தியாவுக்கு 85 பதக்கங்கள்

இதுல இந்தியா இதுவரை 85 பதக்கங்களுடன் 4வதை இடத்தை பிடிச்சது. 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலப் பதக்கங்களோட வீரர், வீராங்கனைகள் நாட்டிற்கு பெருமை தேடித் தந்தாங்க.

341 பதக்கங்களோடு முதலிடத்தில் சீனா

ஆசிய விளையாட்டு போட்டிகளோட பட்டியல்ல 341 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 269 பதக்கங்களோட ஜப்பான், 150 பதக்கங்களோட தென் கொரியாவும் 3வது இடத்தை பிடித்தன.

ஹாக்கி, கபடி, கிரிக்கெட்டில் சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டியில இந்திய அணி ஹாக்கி, கிரிக்கெட், கபடி ஆகிய மூன்றிலும் ஆண் - பெண் இருதரப்பிலும் தங்கப் பதக்கம் வென்று சாதித்தது.

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு ஹாக்கி அணிகளுமே ஒரே நேரத்தில் தங்கப் பதக்கம் வென்றது ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.

1982க்குப் பிறகு, 44 ஆண்டுகள் கழிச்சு,இந்திய பெண்கள் ஹாக்கி அணி தங்கம் வென்றது மிகவும் பெருமைக்குரிய விஷயமா பார்க்கப்படுது.

கோல்ஃப், வில்வித்தையில் தங்கம்

இவை மட்டுமல்லாம, கோல்ஃப், வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், குத்துச்சண்டை, மல்யுத்தம் பிரிவுகளிலும் இந்திய அணியினர் தங்கப் பதக்கங்களை கைப்பற்றினாங்க.

நீரு தண்டா 3 பதக்கம்

துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை நீரு தண்டா 3 பதக்கம் வென்று அசத்தினார். தனிநபர் டிராப் பிரிவில் தங்கம் வென்ற இவர், மகளிரணி பிரிவில் வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கமும் வென்று அசத்தினார்.

வித்யா ராம்ராஜ் 3 பதக்கங்கள்

தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்று அசத்தினார்.

கோஃல்ப் விளையாட்டுல தனி நபர் பிரவில, பிரணவி உர்ஸ், தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமை தேடித் தந்து, வரலாறு படைச்சாங்க.

குன்கும் கோல்ஃப் வீராங்கனை பிரணவி உர்ஸ்

வில்வித்தை வீராங்கனை குங்கும் முகமது, கோல்ஃப் வீராங்கனை பிரணவி உர்ஸ், மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் போன்றவங்க, ஆசிய விளையாட்டுல இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தி வரலாறு படைச்சாங்க.

நட்சத்திர வீரர்கள் நிறைந்த கிரிக்கெட் மற்றும் ஹாக்கி அணிகள் எதிர்பார்த்தபடியே தங்கப் பதக்கங்களோடு நாடு திரும்பின.

கிரிக்கெட்டி்ல் தங்கம்

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கிரிக்கெட் அணி. பரம எதிரியான பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கத்தை வசப்படுத்தியது.

ஹாக்கியில் தங்கம்

இதேபோல ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான ஹாக்கி அணியும் மலேசியாவை துல்லியமா வீழ்த்தி, தங்கத்தை வேட்டையாடியது.

இதன் மூலமா இந்திய ஹாக்கி அணி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரடித் தகுதியையும் பெற்று இருக்கு.

வில்வித்தை வீரர்கள் ஐந்து தங்கப் பதக்கங்கள் உட்பட ஒன்பது பதக்கங்களோட சாதிச்சாங்க.

2023ல சீனாவில நடந்த ஆசிய விளையாட்டில இந்தியா 107 பதக்கங்களை குவிச்சது. இதில 28 தங்கப் பதக்கங்கள் ஆகும். ஆனா இந்த முறை 85 பதக்கங்கள் மட்டும் தான் கிடைச்சு இருக்கு. தனிநபர் பிரிவுகளில இந்தியாவக்கு பதக்கங்கள் அதிகமா கிடைக்கல. அதேசமயம், குழு விளையாட்டுகள்ல்ல தங்கத்தை குவிக்க முடிஞ்சது.

தடகளத்தில் சாதித்த இந்தியா

தடகளத்தில இந்தியாவுக்கு இந்தமுறை, 24 பதக்கங்களை மட்டுமே வசப்படுத்த முடிஞ்சது. துப்பாக்கி சுடுதலிலும் இந்தியாவுக்கு இந்தமுறை பதக்கங்கள் குறைஞ்சிட்டது.

கடந்த முறை ஸ்குவாஷ், பேட்மிண்டன், டென்னிஸ், குதிரையேற்றத்தில தங்கம் வென்ற இந்தியாவுக்கு, இந்த அவையெல்லாம் மிஸ்ஸிங் என்பது ஏமாற்றம் தான்.

அதேசமயம் பார்த்தீங்கன்னா குத்துச்சண்டை, மல்யுத்தம், கோல்ஃப் போட்டிகளில் இந்தியா தங்கம் வென்னு இருக்கு. வில்வித்தையில் மட்டும் இந்தியா, 5 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றது.

கடந்தமுறை தங்கம் கிடைக்காத குத்துச் சண்டையில், இந்த முறை 3 தங்கம், மல்யுத்தத்தில் இரண்டு தங்கம், ஹாக்கியில் தலா இரண்டு தங்கம் என, இந்திய வீரர், வீராங்கனைகள் நாட்டோட பெருமையை உயர்த்தி இருக்காங்க.

துப்பாக்கி சுடுதலில் நீரு தண்டா, வில்வித்தையில் குன்கும் மோஹெத், போன்றவங்களும் 2 பதக்கங்களை வென்று அனைவரையும் ஆச்சரியப்பட வச்சிருக்காங்க.

தமிழக வீராங்கனை வித்யா ரார்மாஜ்-ம் ஆசிய விளையாட்டில முத்திரை பதிச்சாங்க. 400 மீட்டர் தடை தாண்டுதலில் வெண்கலம், 400|4 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம், 400|4 கலப்பு தொடர் ஓட்டத்தில வெள்ளியை கைப்பற்றி சாதிச்சாங்க.

மேலும் 40 மீட்டர் தடை தூண்டுறதல, இந்தியாவோட முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷாவோட 42 ஆண்டுகால சாதனையை முறியடித்து, முத்திரை பதிச்சாங்க.

4வது இடத்தில் இந்தியா

இவங்களோட பதக்க வேட்டை தான் பட்டியல்ல இந்தியாவை 4வது இடத்திற்கு உயர்த்தி பெருமைதேடி தந்திருக்கு. மொத்தத்தில் கடந்த ஆசிய விளையாட்டு போட்டி அளவுக்கு இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைக்கா விட்டாலும், 85 பதக்கங்கள், மற்ற போட்டிகளில் தங்க வேட்டை அப்படின்னு, இது சாதனைப் பயணம் தான்.

மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம்

ஏற்கனவே மத்திய அரசும், தமிழக அரசும் விளையாட்டிற்கு கொடுத்து வரும் முக்கியத்துவம் காரணமா, நமது வீரர், வீராங்கனைகள் உலக அளவில சிறப்பாக செயல்பட்டு, தங்கள் திறமைய வெளிப்படுத்தி வர்றாங்க. எந்தெந்த போட்டிகள்ல்ல நமக்கு பதக்கங்கள் கிடைக்காம போச்சு, காரணம் என்ன? அடுத்த ஆசிய விளையாட்டு போட்டிகள்ல்ல இவற்றிலும் சாதிக்க என்ன செய்யணும்...

இந்தியாவும் வரலாறு படைக்கும்

வீரர்களை எப்படி தயார்படுத்தணும் அப்படிங்கறதல கவனம் செலுத்தப்பட்டால், ஆசிய விளையாட்டுன்னாலே, சீனா தான் நம்பர் ஒன் அப்படிங்கற வரலாற்றை இந்தியா ஒருநாள் நிச்சயம் எழுதும் என்பதில் சந்தேகமே இல்லை.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in