

இந்தியா - நியூசிலாந்து முதல் டி20 போட்டி
Abhishek Sharma’s explosive 84 off 35 balls, India triumphed over New Zealand by 48 runs in the first T20I : இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பீல்டிங்கை தேர்வு செய்ய, இந்தியா பேட்டிங் செய்தது.
அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா
அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா, தனது 7வது அரை சதத்தை கடந்தார். 35 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசிமைதானத்தில் தீபாவளி கொண்டாடினார்.
சூர்யகுமார், பாண்டியா அபாரம்
அவருக்கு பக்கபலமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3பவுண்டரிகளுடன் 25 ரன்களும் சேர்த்தனர்.
ரிங்கு சிங் அதிரடி
இறுதிக்கட்ட ஓவர்களில் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசினார். 238 ரன்களை குவித்தது இந்திய அணி
44வது முறை 200 ரன்கள்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 44வது முறையாகும். நியூஸிலாந்துக்கு எதிராக மட்டும் 5வது முறையாக 200 ரன்களுக்கு மேல் வேட்டையாடி உள்ளது.
நியூசிக்கு 239 ரன்கள் இலக்கு
239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. முதல் இரண்டு ஓவர்களில் கான்வே (0) மற்றும் ரச்சின் ரவீந்திரா (1) ஆட்டமிழந்தனர்.
கிளென் பிலிப்ஸ் 78 மற்றும் மார்க் சாப்மேன் 39 ரன்கள் எடுத்தனர். மிட்செல் 28, ராபின்சன் 21 மற்றும் சான்ட்னர் 20 ரன்கள் எடுத்தனர்.
190 ரன்களில் சுருண்ட நியூசி
அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 48 ரன்களில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா
இந்திய அணி சார்பில் வருண் மற்றும் ஷிவம் துபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் தாள் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.
===================