
Afghan Cricketer Ziaur Rahman : ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜியாவுர் ரஹ்மான் ஷெரிஃபி (Ziaur Rahman Sharifi) தனது அபார பந்துவீச்சால் புதிய சாதனை செய்து அசத்தியுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டி
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, உலக கிரிக்கெட் அரங்கின் கவனத்தை ஈர்த்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜியாவுர் ரஹ்மான் ஷெரிஃபி. இந்த சாதனை மூலம், ஆசிய கண்டத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் அறிமுகப் போட்டியிலேயே இத்தகைய சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஜிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் போட்டி
ஆப்கானிஸ்தானுக்குப் பின்னடைவு ஹராரேவில் நடைபெற்று வரும் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன. இதில், டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த ஜிம்பாப்வே அணி, ஆப்கானிஸ்தானை முதல் இன்னிங்ஸில் 127 ரன்களுக்குள் மடக்கி முதலிடத்தை தக்கவைத்து கொண்டது(Afghanistan vs Zimbabwe Test). இந்த போட்டியில் ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அறிமுக போட்டியில் முதலிடம்
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி, வலுவான நிலையில் ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடியபோது, ஆப்கானிஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த 27 வயது நிறைந்த வேகப்பந்து வீச்சாளரான ஜியாவுர் ரஹ்மான் ஷெரிஃபி எதிர் அணியை தனது திறமையினால், துவம்சம் செய்ய தொடங்கினார்.
ஜிம்பாப்வே ஆட்டமிழப்பு
வலது கை மிதவேகப்பந்து வீச்சாளரான ஷெரிஃபி, தனது சீரான வேகம் மற்றும் ஸ்விங் மூலம் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் சவாலாக விளங்க தொடங்கினார். 32 ஓவர்கள் பந்துவீசி, 97 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம், ஜிம்பாப்வே அணியின் முதல் இன்னிங்ஸ் ரன் குவிப்பிற்கு அவர் பெரும் தடையாக அமைந்தார். ஜிம்பாப்வே அணி இறுதியில் 359 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஷெரிஃபியின் சாதனை
சரித்திரத்தில் இடம்பிடித்த ஷெரிஃபி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், அறிமுகப் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆசிய கிரிக்கெட்டில் பெரும் சாதனையை படைத்துள்ளார். அறிமுக டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஷெரிஃபி படைத்துள்ளார்.
முந்தைய வீரர்களின் சாதனை
இதற்கு முன்பு, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மது ஜாஹித், 1996 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக தனது அறிமுகப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தான் 66 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகப் போட்டியில் சிறந்த பந்துவீச்சு உலக சாதனையைப் படைத்த இந்தியாவின் நரேந்திர ஹிர்வானி (8/61), ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.
மேலும் படிக்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய முறை : 4 இன்னிங்க்ஸ் 20 ஓவர்கள்
ஜியாவுர் ரஹ்மான் ஷெரிஃபி யார்
1998 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் பிறந்தவர் ஜியாவுர் ரஹ்மான் ஷெரிஃபி. அவர் தனது முதல் கிரிக்கெட் பயணத்தை 2017 ஆம் ஆண்டு தொடங்கினார். உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில், அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைத்தது. இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஒரு டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்காக விளையாடியுள்ளார். தற்போது ஜிம்பாப்வேக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டி, அவரது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். தனது முதல் வாய்ப்பிலேயே இத்தகைய ஒரு வரலாற்றுச் சாதனையை அவர் நிகழ்த்தியிருப்பது, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு பெரும் பக்கபலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷெரிஃபின் பந்துவீச்சு
ஷெரிஃபியின் இந்த பந்துவீச்சால், தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் அதிக ரன் குவித்தால் மட்டுமே வெற்றி பெற்று தனது இடைத்தை தக்கவைக்கும் என்பது மிகையாகாது.