FIFA 2026 : ”உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் கோல்” மெஸ்ஸி அசத்தல் : அர்ஜென்டினா அபார வெற்றி, அல்ஜீரியா அதிர்ச்சி!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி அடித்த 3 கோல்கள் காரணமாக, அர்ஜென்டினா அணி அசத்தலான வெற்றியை பெற்றது.
Argentina achieved a spectacular victory thanks to the three goals scored by Messi
Argentina achieved a spectacular victory thanks to the three goals scored by Messigoogle
1 min read

அர்ஜென்டினா - அல்ஜீரியா

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பைகுரூப் 'ஜே' முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, அல்ஜீரியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது.

மெஸ்ஸி சிறப்பான ஆட்டம்

போட்டி தொடங்கிய முதலே அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அல்ஜீரிய தற்காப்பு அரணை உடைத்து மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார்.

தொடர்ந்து 2வது பாதி ஆட்டத்தில் மேலும் 2 கோல்களை அடித்து, ஹாட்ரிக் சாதனை படைத்தார் மெஸ்ஸி.

38 வயதில் சாதனை

கால்பந்து வரலாற்றில் 38 வயதில் உலகக்கோப்பையில் ஹாட்ரிக் கோல் அடித்த மிக மூத்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி இதன் மூலம் படைத்துள்ளார்.

உலக சாதனை சமன்

இந்த ஹாட்ரிக் கோல்களின் மூலம் உலகக்கோப்பை தொடர்களில் மெஸ்ஸியின் மொத்த கோல்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த ஜெர்மனியின் முன்னாள் வீரர் மிரோஸ்லாவ் குளோசேயின் (Miroslav Klose) நீண்ட கால வரலாற்று சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.

அரணாக தடுத்த அர்ஜென்டினா

அல்ஜீரிய அணியினரின் பதில் கோல் அடிக்கும் முயற்சிகள் அனைத்தையும் அர்ஜென்டினாவின் தற்காப்பு வீரர்கள் அரண் போல் தடுத்து நிறுத்தினர்.

இதன் காரணமாக அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

ஆட்டத்தின் முக்கிய அம்சங்கள்

கேப்டன் லியோனல் மெஸ்ஸி மூன்று கோல்கள் அடித்து (ஹாட்ரிக்) அசத்தல்.

உலகக்கோப்பை வரலாற்றில் மெஸ்ஸியின் முதல் ஹாட்ரிக் கோல் இது.

16 உலகக்கோப்பை கோல்களுடன் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையை மெஸ்ஸி சமன் செய்தார்.

200-வது சர்வதேசப் போட்டியில் விளையாடி மெஸ்ஸி புதிய மைல்கல்லை எட்டினார்.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in