
ஆசிய கோப்பை டி.20 தொடர் :
India vs UAE Asia Cup 2025 Match Today Update : 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது. 14ம் தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான பலப்பரீட்சைக்கு இந்த ஆட்டம் சிறந்த பயிற்சியாக இருக்கும்.
இந்தியாவின் பேட்டிங் வரிசை :
இந்தியாவை பொருத்தவரை பேட்டிங் வரிசையில் ஷுப்மன் கில் மீண்டும்(India Squad for Asia Cup 2025) திரும்பி உள்ளதால் சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாக உள்ளது. சாம்சன் முதல் 3 இடங்களுக்குள் விளையாடக் கூடியவர். தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் களமிறங்கும் பட்சத்தில் 3வது வீரராக திலக் வர்மா விளையாட வாய்ப்பு உள்ளது. 4வது இடத்தில் சூர்யகுமார் யாதவும், அவரை தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும் களமிறங்குவர். 6-து இடத்தில் ஷிவம் துபே, விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 7வது இடத்தில் விளையாடுவார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சவால் :
ஐக்கிய அரபு அமீரக அணியை பொறுத்தவரை, இந்த ஆட்டம் மிகப்பெரிய போட்டி தான். ஏனெனில் ஜஸ்பிரீத் பும்ராவை எதிர்கொள்வது அல்லது ஷுப்மன் கில்லுக்கு பந்து வீசுவது என்பது ஐசிசி உறுப்பு நாட்டின் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஆசிய கோப்பை தொடர் அந்த அணிக்கு உயர்மட்ட அளவிலான போட்டிகளை விளையாடுவதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கும்.
ஆக்ரோஷமே இந்தியாவின் பலம் :
இன்றைய லீக் ஆட்டம் பற்றி இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்(Suryakumar Yadav) கூறும்போது, “களத்தில் ஆக்ரோஷம் என்பது எப்போதும் இருக்கும். ஆக்ரோஷம் இல்லாமல் விளையாட முடியாது. ஆசிய கோப்பையில் சிறந்த அணிகளுடன் விளையாடுவது நல்ல பயிற்சியாக இருக்கும். ஐக்கிய அரபு அமீரக அணியினரும் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். ஆசிய கோப்பையில் அவர்கள் சாதிப்பார்கள்” என்று கூறினார்.
வெற்றியை விட்டுக் கொடுக்க மாட்டோம் :
ஐக்கிய அரபு அமீகரத்தின் பயிற்சியாளரான லால்சந்த் ராஜ்புத் முதல் லீக் ஆட்டம் பற்றி கூறுகையில், “ஷார்ஜாவில் நடந்த முத்தரப்பு டி 20 தொடரில் விளையாடியதன் மூலம் ஆசிய கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராகி உள்ளோம். முத்தரப்பு தொடரின் ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் 5 விக்கெட்களை 100 ரன்களுக்குள் கைப்பற்றினோம். இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் கடினமானது தான். ஆனால், சிறந்த அணிக்கு எதிரான விளையாடுவது எங்களின் திறமையை சோதிக்க வாய்ப்பாக அமையும். வெற்றியை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் படிக்க : ஆசிய கோப்பை டி20 : முதல் ஆட்டத்தில் ஆப்கன் - ஹாங்காங் பலப்பரீட்சை
அணிகள் விவரம்
இந்தியா(India Squad for India vs UAE Match): சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.
ஐக்கிய அரபு அமீரகம்(UAE Squad for India vs UAE Match): முஹம்மது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் ஷர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோசா, ஹைதர் அலி, ஹர்ஷித் கவுஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முஹம்மது ஃபரூக், முஹம்மது ஜவதுல்லா, முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் கான், சிம்ரன்ஜீத் சிங், சாகிர் கான்.
================