

ஆசிய விளையாட்டு போட்டிகள்
20வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று அசத்தி வருகிறார்கள்.
துப்பாக்கி சுடுதலில் தங்கம்
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங், கமல்ஜீத் ஜோடி 484.6 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது.
நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா கைப்பற்றும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
தென்கொரியா வெள்ளி, ஈரான் வெண்கலம்
தென் கொரியாவின் கேயூன் சூ, சுஹியோன் ஹாங் ஜோடி 478 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ஈரானின் ரோஸ்டாமி யன் ஹனியே, கோல்கந்தன் வஹித் ஜோடி 415.8 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் பெற்றன.
வெள்ளி பதக்கம்
ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ருத்ராங்க் ஷ் பாட்டீல், நீரஜ் குமார் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,762 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
சீனா 1,766 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், கொரியா 1,751 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றன.
===================