Shreyas Iyer : எப்படி இருக்கிறார் ஷ்ரேயாஸ் - பிசிசிஐ சொன்ன பதில்!

Shreyas Iyer Health Update Tamil: சிட்னியில் ஆஸ்திரேலியா- இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது, பின்னர் சிகிச்சை பெற்று வந்த அவரின் நிலமை குறித்து பிசிசிஐ தெரிவித்துள்ளது
BCCI Medical Team on Shreyas Iyer Health Update in Tamil
BCCI Medical Team on Shreyas Iyer Health Update in TamilBCCI
1 min read

ஆஸ்திரேலியா இந்தியா மோதல்

Shreyas Iyer Health Update in Tamil : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் இந்தியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் முன்னரே ஆஸ்திரேலியா 3-2 என்ற செட் கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், 3 வது போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஷ்ரேயாஸ் ஐயர் காயம்

இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் சிரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து பந்தை பிடித்து அவரது விக்கெட்டை இழக்க செய்தனர். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

மருத்துவமனையில் சிகிச்சை

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் ஐ.சியூ வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் பதிவு

பின்னர், அவரின் உடல்நிலை குறித்து பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஐசியூவில் இருந்து பொது வார்டிற்கு மாற்றப்பட்ட அவர். தனது உடல்நிலை குறித்து 2 நாட்களுக்கு முன்னர் நலமாக இருப்பதாகவும் தனது நலனுக்காக வேண்டிய அனைவருக்கும் நன்றி என தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

ஸ்ரேயாஸ் டிஸ்சார்ஜ் - பிசிசிஐ

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் அவர் குணமடைந்ததில் பிசிசிஐ மருத்துவக் குழுவும்,சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் நிலை குறித்து ஷ்ரேயாஸ் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in