
பிபா உலகக்கோப்பை கால்பந்து
Cape Verde, a small island nation in Africa, made history, qualifying for their first-ever FIFA World Cup : 2026ம் ஆண்டு நடைபெற இருக்கும் பிபா உலகக்கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இம்முறை 32 அணிகளுக்கு பதிலாக 48 நாடுகளின் அணிகள் பங்கேற்க இருக்கின்றன.
சிறிய நாடான கேப் வெர்டே தகுதி
ஆப்பிரிக்க தகுதிச் சுற்றில் எஸ்வதினியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய, கேப் வெர்டே என்னும் குட்டி நாடு, முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றிருக்கிறது. ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றான இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகை 5.25 லட்சம் மட்டும் தான். ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள எரிமலை தீவுகளின் தீவுக்கூட்டம் தான் இந்த நாடு.
2018ம் ஆண்டு பிபா உலகக்கோப்பையில் இடம்பெற்ற மிகச்சிறிய நாடாக ஐஸ்லாந்து கருதப்பட்டது. தற்போது உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறும் 2வது சிறிய நாடாக கேப் வெர்டே இடம் பிடித்து இருக்கிறது.
கேப் வெர்டா மக்கள் கொண்டாட்டம்
கேப் வெர்டேவின் டெய்லன் லிவ்ரமென்டோ, வில்லி செமெடோ, ஸ்டாப்பேஜ் ஆகியோர் கோல் அடித்து, தங்கள் நாட்டு மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கின்றனர். வெற்றிக்கு பின் ரசிகர்களுடன் இணைந்து தேசியக் கொடியோடு, மைதானத்தில் உலகக்கோப்பை தகுதியை வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
குவியும் வாழ்த்துக்கள்
இந்த தகுதி குறித்து பிபா தலைவர் கியானி இன்பான்டினோ கூறுகையில், ‘‘ இது ஒரு வரலாற்று தருணம். உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றதற்காக கேப் வெர்டேயில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் கொடி பறக்கும், உங்கள் கீதம் இதுவரை இல்லாத மிகப்பெரிய பிபா உலகக் கோப்பையில் ஒலிக்கும். கால்பந்து வளர்ச்சியில் உங்கள் பணி நம்பமுடியாததாக உள்ளது. உலகளாவியதாக மாறி கேப் வெர்டே முழுவதும் புதிய தலைமுறை கால்பந்து வீரர்களுக்கு சக்தி அளிக்கும் தருணம்’’ என்றார்.
===