கார்லசுடன் 4 செட் சிறப்பானது : நோவக் ஜோகோவிச் பதில்!

Novak Djokovic: அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னரை 5 செட்டுகளில் தோற்கடித்தேன். இறுதிச்சுற்றில் கார்லசுடன் 4 செட் வரை நெருக்கமாக வந்தது சிறப்பானது என்று நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
Carlos Alcaraz defeats Novak Djokovic in Australian Open final 2026 "The match with Carlos in 4 sets was excellent," replies Novak Djokovic
Carlos Alcaraz defeats Novak Djokovic in Australian Open final 2026 "The match with Carlos in 4 sets was excellent," replies Novak DjokovicSource : Carlos Alcaraz v Tommy Paul Highlights | Australian Open 2026 Fourth Round
1 min read

கார்லோஸ் அல்காரஸ் மற்றும் நோவக் ஜோகோவிச் மோதல்

Carlos Alcaraz defeats Novak Djokovic in Australian Open final 2026 : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.

இந்த தொடரில் முதல் செட்டை ஜோகோவிச் 6-2 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார். நான்காவது செட் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இரு வீரர்களும் மாறி மாறி கேம்களை வென்று அபாரமாகப் போராடினர்.

ஒரு கட்டத்தில் 5-5 என சமநிலை ஏற்பட்டபோது, அல்காரஸ் தனது அதிரடி ஆக்ரோஷத்தைப் பயன்படுத்தி அடுத்தடுத்து இரண்டு கேம்களை வென்று வெற்றியை தனதாக்கினார்.

அமெரிக்க ஓபனுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறவில்லை

ஆனால் குறிப்பாக, இலக்கங்களில் அல்காரஸ் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

25வது கிராண்ட்ஸ்லாம் வெல்வேன்

இந்நிலையில், தோல்விக்கு பிறகு ஜோகோவிச்சிடம், உங்களால் இன்னும் 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல முடியும் என்று நம்புகிறீர்களா என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த ஜோகோவிச், என்னால் முடியும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது

இல்லாவிட்டால் நான் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். இதை பலமுறை கூறி விட்டேன். அரையிறுதியில் ஜானிக் சின்னரை 5 செட்டுகளில் தோற்கடித்ததும், இறுதிச்சுற்றில் கார்லசுடன் 4 செட் வரை நெருக்கமாக வந்ததும் சிறப்பானது.

அற்புதமான தொடக்கத்திற்கு பிறகு 2-வது மற்றும் 3-வது செட்டில் விளையாடிய விதம் ஏமாற்றம் அளித்தது என தெரிவித்தார்.

2023-ம் ஆண்டு அமெரிக்க ஓபனுக்கு பிறகு ஜோகோவிச் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in