IPL 2026 : சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன் : ”CSK முதல் வெற்றி” : தொடர் தோல்வியில் டெல்லி அணி!

ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால், சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
Chennai recorded their first win in the IPL thanks to Sanju Samson's impressive century
Chennai recorded their first win in the IPL thanks to Sanju Samson's impressive centurygoogle
1 min read

டெல்லி அணி பந்துவீச்சு

சென்னை சேப்பாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

சென்னை அணிக்கு தொடக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி களமிறங்கியது.

சஞ்சு சாம்சன் அசத்தல்

ருதுராஜ் 18 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இருப்பினும், மறுமுனையில் சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆயுஷ் மத்ரே அதிரடி ஆட்டம்

அவருக்குத் துணையாக ஆடிய ஆயுஷ் மத்ரே 59 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் என்ற வலுவான இலக்கை எட்டியது.

டெல்லி அணிக்கு 213 ரன்கள்

213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. கே.எல். ராகுல் 18 ரன்கள், பாதும் நிசங்கா 41 ரன்கள் எடுத்தனர். ஆனால், ஜேமி ஓவர்டன் பந்துவீச்சில் வரிசையாக விக்கெட்டுகள் விழத் தொடங்கின.

வரிசையாக விழுந்த விக்கெட்டுகள்

திரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 பந்துகளில் 60 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்லப் போராடினார். இருப்பினும், மற்ற வீரர்கள் அவருக்கு ஈடுகொடுக்கத் தவறியதால், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

ஜேமி ஓவர்டன் சிறப்பான பந்துவீச்சு

சென்னை தரப்பில் ஜேமி ஓவர்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 புள்ளிகளை பெற்றுள்ளது.

ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

டெல்லி அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். சதமடித்து அசத்திய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சாம்சன் கலக்கல் சாதனை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறந்த பேட்ஸ்மேன் தேவை என்ற நோக்கில், ராஜஸ்தான் அணியிடம் இருந்து கேட்டு பெறப்பட்ட சஞ்சு சாம்சன், கடந்த 3 போட்டிகளில் ரன் எடுக்காமல் சொதப்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சஞ்சு, 52 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் அரங்கேற்றினார்.

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in