18 காரட் தங்கம், 900 வைரக் கற்கள் : கண்களை பறிக்கும் உலகக்கோப்பை கால்பந்து கோப்பை : அசத்திய துபாய் வைர வியாபாரி...!

900 வைரக் கற்களால் செய்யப்பட்ட பிஃபா கால்பந்து உலககோப்பை கால்பந்தை வடிவமைத்து அசத்தி இருக்கிறார் துபாயை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர்.
Dubai-based diamond merchant created, FIFA World Cup football using 900 diamonds
Dubai-based diamond merchant created, FIFA World Cup football using 900 diamondsAI generated
1 min read

உலகக்கோப்பை கால்பந்து தொடர்

Dubai jeweller unveils $82,000 diamond-studded LEGO World Cup trophy : 900 diamonds and 18-carat gold and valued at 300,000 dirhams in Dubai, United Arab Emirates :

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோடிக்கணக்கான ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

900 வரைக் கற்கள்

இந்தநிலையில், 900 வைரக் கற்களால் செய்யப்பட்ட பிஃபா கால்பந்து உலக கோப்பை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பிஃபா கால்பந்து உலக கோப்பை மாதிரியை துபாயைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் உருவாக்கி அசத்தி உள்ளார்.

18 காரட் தங்கத்தில் கோப்பை

18 காரட் தங்கத்தால் உருவான கோப்பையில் 900 வைரக் கற்களை பதித்து பார்க்கவே பிரமாண்டமாக பிஃபா கால்பந்து கோப்பையின் மாதிரியை நகை வியாபாரி ஹேமந்த் கரம்சாந்தினி அருமையாக செதுக்கியுள்ளார்.

துபாய் கண்காட்சியில் வைப்பு

துபாயில் உள்ள கண்காட்சியில் உலக கோப்பை மாதிரி காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனது மகனின் விருப்பத்திற்காக உருவாகியதாகவும் ஹேம்ந்த் கரம்சாந்தினி தெரிவித்துள்ளார்.

மதிப்பு 82,000 டாலர்கள்

இந்த கோப்பையின் மதிப்பு 82,000 ஆயிரம் டாலர்கள், அதாவது துபாயின் மதிப்பில் 3 லட்சம் திராம்ஸ் ஆகும்.

நாக் அவுட் சுற்றுகளை நோக்கி நகரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in