

ஜெர்மனியின் மியுனிச் நகரில், சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ISSF) சார்பில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாளறிவன் கலந்து கொண்டார்.
தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, சிறப்பாக செயல்பட்ட அவர் இறுதிச் சுற்றில் 231.2 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
இந்தப் போட்டியில் சீனாவின் ஸிபெய் வாங், 252.7 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
தென் கொரியாவை சேர்ந்த குவோன் யுஞ்சி, 252.6 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த தொடரில் 20 முறை முதலிடத்தில் இருந்த இளவேனில், 21வது முறையில் பின்தங்கி மூன்றாம் இடத்தை பிடித்தார்.
இதற்கு முன்பு டோக்கியோ, பாரிஸ் நகரங்களில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இறுதிச் சுற்று வரை முன்னேறாத இளவேனில், தொடர் பயிற்சிகளின் காரணமாக, இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், 2019ம் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தங்கப் பதக்கத்தை வென்றது நினைவு கூரத்தக்கது.
ஆடவருக்கான, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிச் சுற்றில், இந்தியாவை சேர்ந்த வருண் தோமர், 160.3 புள்ளிகளுடன் 6ம் இடத்தை பெற்றார்.