ஒரே போட்டியில் 10 சாதனைகள் : மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்

Joe Root Test Records 2025 : இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 10 சாதனைகளை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
England Cricketer Joe Root Test Record After IND vs ENG 4th Test Match 2025
England Cricketer Joe Root Test Record After IND vs ENG 4th Test Match 2025https://x.com/englandcricke
2 min read

இங்கிலாந்து அணி அபார ஆட்டம் :

Joe Root Test Records 2025 : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை அசத்தலாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி, 3வது நாளான நேற்று ஆட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 544 ரன்கள் எடுத்து இருந்தது. 150 ரன்களை குவித்து ஆட்டமிழந்த அந்த அணியின் ஜோ ரூட் நேற்று சாதனை நாயகனாக மிளிர்ந்தார்.

சாதனை நாயகன் ஜோ ரூட் :

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 விதமான சாதனைகளை படைத்த அற்புதமாக ஆட்டக்காரராக ஜோ ரூட் ஜொலிக்கிறார். அவரின் சாதனை விவரங்களை வருமாறு :

1. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ராகுல் டிராவிட் (13, 288 ரன்), காலிஸ் (13, 289), ரிக்கி பாண்டிங் (13,378) ஆகியோரை ஜோ ரூட் முந்தினார். 13,409 ரன்களுடன் அவர் 2வது இடத்தை பிடித்தார். 15,921 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

சங்ககாராவை சமன் செய்த ரூட் :

2. 157வது டெஸ்ட் கிரிகெட் விளையாடிய அவருக்கு இது 38வது சதமாகும். இதன் மூலம் இலங்கையை சேர்ந்த சங்ககராவை ஜோ ரூட் சமன் செய்தார். டெண்டுல்கர் (51 சதம்), காலிஸ் (45), ரிக்கி பாண்டிங் (41) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ஜோ ரூட் உள்ளார்.

3. இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்தவர் (12) என்ற சாதனையையும் ஜோ ரூட் படைத்தார். முன்னதாக ஸ்டீவ் ஸ்மித் 11 சதங்களை அடித்து இருந்தார்.

பிராட்மேன் சாதனை தகர்ப்பு :

4. இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் ஜோ ரூட் 9வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட்மேன் சாதனையை அவர் முறியடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக பிராட்மேன் சொந்த மண்ணில் 8 சதங்கள் அடித்து இருக்கிறார்.

மான்செஸ்டரில் 1,000 ரன்கள் :

5. மான்செஸ்டர் மைதானத்தில் டெஸ்ஸ் போட்டியில், 1,000 ரன்களை எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் ஜோ ரூட் பெற்றார்.

6. இரண்டுக்கும் மேற்பட்ட மைதானங்களில் ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் 2,166, மான்செஸ்டர் மைதானத்தில் 1,128 ரன்களை அவர் எடுத்து இருக்கிறார்.

104 முறை அரைசதம் :

7. 104 முறை அரை சதம் அடித்து இருக்கிறார் ஜோ ரூட். இதன்மூலம் இந்த வரிசையில் 2வது இடத்திற்கு அவர் முன்னேறினார். முதலிடத்தில் (119 முறை) சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

8. ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் ( 12 முறை ) என்ற இங்கிலாந்து வீரர் ஜேக் ஹாப்ஸ் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

ஜடேஜா பந்தில் 588 ரன்கள் :

9. இந்திய பந்து வீச்சாளர் ஜடேஜா பந்தில், ஜோ ரூட் 588 ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம் ஸ்டீவ் வாக் சாதனையை அவர் முந்தினார்.

10. ஜோ ரூட் சொந்த மண்ணில் 7,195 ரன்களை குவித்து இருக்கிறார். இதன்மூலம், இலங்கை வீரர் ஜெயவர்தனே சாதனையை முந்தி இருக்கிறார். அவர் இலங்கை மண்ணில் 7,167 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in