FIFA WC 2026: எம்பாப்பே, டெம்பலே அசத்தல் : அரை இறுதியில் நுழைந்த பிரான்ஸ் : கோல் அடிக்க முடியாமல் வெளியேறிய மொராக்கோ...!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
France defeated Morocco 2-0 in the World Cup football quarter-final
France defeated Morocco 2-0 in the World Cup football quarter-finalgoogle
2 min read

அமெரிக்கா - மொராக்கோ மோதல்

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - மொராக்கோ அணிகள் மோதின.

எம்பாப்வே முயற்சி வீணானது

தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அணி பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்து அதிரடி காட்டியது. 4வது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பே அடித்த ஷாட் போஸ்ட்டின் வலது பக்கமாக நூலிழையில் வெளியேறியது.

26-வது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பேவை, மொராக்கோ டிஃபெண்டர் நுஸைர் மஸ்ராவி ஃபவுல் செய்ததால், விஏஆர் ஆய்வுக்குப் பிறகு பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இருப்பினும், எம்பாப்பே அடித்த பெனால்டி ஷாட்டை மொராக்கோ கோல்கீப்பர் யாசின் போனோ இடதுபுறம் பாய்ந்து தடுத்து விட்டார். முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் எதுவும் அடிக்கப்படாததால் ஆட்டம் 0-0 என சமநிலையில் இருந்தது.

பிரான்ஸ் முன்னிலை

இரண்டாவது பாதியில் பிரான்ஸ் தனது அதிரடியை காட்டியது. 60வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி தனது முதல் கோலை அடித்தது.

எம்பாப்பே கோல்

மொராக்கோ அணியின் டிஃபென்டர் தியோப்பை ஏமாற்றி கிலியன் எம்பாப்பே அடித்த ஷாட் கோல் வலையை துளைத்தது. இதனால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

டெம்பலே கோல்

அடுத்த 6-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி மீண்டும் கோல் அடித்தது.

66வது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பே கொடுத்த அருமையான பாஸை பயன்படுத்தி பாக்ஸின் விளிம்பிலிருந்து உஸ்மான் டெம்பலே அடித்த தாழ்வான ஷாட், அருமையான கோலாய் மாறியது.

மொராக்கோ அணியின் கோல்கீப்பர் யாசின் போனோவால் முழுமையாக தடுக்க முடியாமல் போக, பந்து கோல் வலையின் கீழ் கார்னரை துளைத்தது. இதனால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

மொராக்கோ முயற்சிகள் வீணாகின

இறுதி வரை முயற்சி செய்த போதிலும் மொராக்கோ அணியால் பதிலடி கொடுக்க முடியாமல் போனது.

அரை இறுதியில் பிரான்ஸ்

முடிவில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி தொடர்ச்சியாக 3வது முறையாக அரை இறுதியில் கால்பதித்துள்ளது. கடந்த 2018, 2022-ம் ஆண்டு தொடரிலும் பிரான்ஸ் அணி அரை இறுதியில் விளையாடி இருந்தது.

ஸ்பெயினுடன் மோதும் பிரான்ஸ்

14ம் தேதி டல்லாஸ் மைதானத்தில் நடைபெறும் அரை இறுதி சுற்றில் பிரான்ஸ் ஸ்பெயின் அணியை எதிர்த்து விளையாடும்.

20 ஆட்டம் 20 கோல்கள்

நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பே 60வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

உலகக் கோப்பை தொடர்களில் அவர், இதுவரை 20 ஆட்டங்களில் விளையாடி 20 கோல்கள் அடித்துள்ளார்.

மெஸ்ஸி தொடர்ந்து முன்னிலை

அதிக கோல்கள் அடித்துள்ளவர்களின் பட்டியலில் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸியை விட (21 கோல்கள்) எம்பாப்வே ஒரு கோல் மட்டுமே பின்தங்கியுள்ளார்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in