தோனி, ரோஹித் வரிசையில் இணைந்தது மகிழ்ச்சி : இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி!

நடந்து முடிந்த உலககோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றியை கைப்பற்றியது குறித்து சூர்யகுமார் யாதவ் பகிர்ந்து கொண்டார்
Happy to see MS Dhoni and Rohit joining the ranks - Indian team captain Surya kumar Yadav is resilient
Happy to see MS Dhoni and Rohit joining the ranks - Indian team captain Surya kumar Yadav is resilientgoogle
1 min read

தொடர் வெற்றியை தன் வசப்படுத்திய இந்தியா

இந்திய அணி 2007-ம் ஆண்டு நடை​பெற்ற டி 20 உலகக் கோப்பையை எம்​.எஸ்​.தோனி தலை​மையி​லான இந்​திய அணி வெற்றியை கைப்பற்றியிருந்தது

அதனை தொடர்ந்து 2024-ம் ஆண்டு ரோஹித் சர்மா தலை​மையி​லான இந்​திய அணி கோப்​பையை வென்று அசத்​தி​யது.

இந்த வரிசை​யில் தற்​போது 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்​பைத் தொடரில் சூர்​யகுமார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி சாம்பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​துள்​ளது குறிப்பிடத்தக்கது.

வெற்றி குறித்து பகிர்ந்து கொண்ட சூர்யகுமார் யாதவ்

டி20 உலகக் கோப்​பையை 2024 மற்​றும் 2026 என அடுத்​தடுத்து வெல்​வது மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருக்கிறது. இது மிகச்​சிறந்த உணர்​வு. நாங்​கள் 2024-ல் வென்​ற​போது, மீண்​டும் ஒரு​முறை 2026-ல் நமது சொந்த மண்​ணிலேயே வென்​றால் மிக​வும் சிறப்​பான​தாக இருக்கும் என்று நினைத்திருந்தோம் அதன்படியே வென்றும் விட்டோம் என்றும்

மேலும் படிக்க : டி20 உலககோப்பை 2026: அதிக ரன்கள், அதிக சிக்சர்கள், அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் முழு விவரம் இதோ!

அடுத்த இலக்கு 2028 ஒலிம்பிக்

அடுத்த இலக்கு 2028-ம் ஆண்டு நடை​பெறும் ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வெல்​வது​தான். இந்​திய அணி தற்​போது நல்ல உத்​வேகத்​துடன் உள்​ளது. 2028-ம் ஆண்​டில் நடை​பெறும் டி20 உலகக் கோப்​பையை​யும் இந்​திய அணி வென்றால், மிக​வும் சிறப்​பாக இருக்​கும் என்றும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்

இந்திய அணியின் கேப்டனாக இருப்பதில் பெருமிதம் கொள்ளகிறேன்-சூர்யகுமார் யாதவ்

டி20 உலகக் கோப்​பையை வென்ற கேப்​டன்​களில் ரோஹித் சர்மா மற்​றும் தோனி ஆகியோரது வரிசை​யில் நானும் இணைந்​துள்​ளது மிகுந்த மகிழ்ச்​சி​யளிக்​கிறது. இவர்​களு​டன் இணைந்​துள்ள தருணத்தை நான் மெல்ல உணரத் தொடங்​கு​கிறேன் ,

மிகப் பெரிய வீரர்​களான இவர்​களு​டன் நானும் இடம்​பெறு​வது மிகுந்த மகிழ்ச்​சி​யளிக்​கிறது. எதிர்​காலத்​தி​லும் நான் இதையே செய்ய முயற்​சிப்​பேன், இந்​திய அணி அதிக கோப்​பைகளை வெல்ல தொடர்ந்து உதவுவேன் என்று மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார் .

மேலும் படிக்க : T20 உலகக் கோப்பை வெற்றி : இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு: பிசிசிஐ அறிவிப்பு!

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in