அதிக ரன் சேஸ் : நியூசிலாந்து மகளிர் அணி உலக சாதனை! இந்திய மகளிர் அணி சாதனை முறியடிப்பு!

347 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணி 49.4 ஓவரிகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்களை குவித்து நியூசிலாந்து அணி அசத்தியது.
New Zealand Women's Team Sets World Record
New Zealand Women's Team Sets World Recordsource : google
1 min read

5 T20 மகளிர் ODI கிரிக்கெட்டி

பெண்களுக்கான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியினர் அதிக ரன்கள் சேஸ் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து

தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

நியூசிலாந்து கேப்டன் அமெலியா கெர், ஆட்டமிழக்காமல் 179 ரன்கள் குவித்து தனது அணியை 347 ரன்கள் என்ற சவாலான இலக்கை பிடிக்க வழிநடத்தினார்.

தென் ஆப்ரிக்க அணியினர் தற்போது நியூசிலாந்தில் 5டி20 மற்றும் 3 ஓடிஐ கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்ரிக்க அணி

வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்ரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் குவித்தது.

அதிகபட்ச ரன்கள்

அதில் அதிகபட்சமா அன்னேகே 91 ரன்களும், கேப்டன் லாரா வோல்வார்ட் 69 ரன்களும் குவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து 347 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணி 49.4 ஓவரிகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்களை குவித்து அசத்தியது.

நியூசிலாந்து அணி வெற்றி

நியூசிலாந்து கேப்டன் அமெலியா கெர் மட்டும் 139 பந்துகளில் 23 பவுண்டரி,ஒரு சிக்ஸ்ர் உட்பட 179 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி நியூசிலாந்து அணியை வெற்றிபெற செய்தார்.

இந்திய மகளிர் அணி சாதனை முறியடிப்பு

நியூசிலாந்து மகளிர் அணியின் இந்த அதிரடி ரன் குவிப்பு ஏற்கெனவே இந்திய மகளிர் அணி ரன் குவிப்பில் படைத்திருந்த சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆண்டு மகளிர் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியினர் 339 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தனர்.

இந்திய மகளிர் அணியின் இந்த சாதனையை தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து 450 ரன்களை குவித்து முறியடித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in