ஐபிஎல் தொடங்கும் முன்பே எனது இலக்கை எழுதி வைத்துவிட்டேன்: வைபவ் சூர்யவன்ஷி!

நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பே 700 ரன்கள் குவிக்க வேண்டும் என்பதை தனது இலக்காக எழுதி வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். சூர்யவன்ஷியின் பேச்சு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
"I wrote down my goal even before the IPL began: Vaibhav Suryavanshi!"
"I wrote down my goal even before the IPL began: Vaibhav Suryavanshi!"source:google,ai generated
1 min read

இலக்கை எழுதி வைத்துவிட்டேன் - சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பே தனது இலக்கு என்ன என்பதை எழுதி வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக சாம்பியன் கோப்பை

நடப்பு ஐபிஎல் போட்டியின் 19வது தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

அதிரடி ஆட்டத்தின் மூலம் கவனம்

நடப்பு ஐபிஎல் போட்டியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூர் அணியின் 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தியும் தன் பக்கம் திருப்பினார்.

அதிக ரன்கள் பட்டியலில் முதலிடம்

15 வயதில் 16 போட்டிகளில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 776 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தினார்.

இந்த நிலையில் இதுகுறித்து வைபவ் சூர்யவன்ஷி பேசும்போது, நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பே 700 ரன்கள் குவிக்க வேண்டும் என்பதை தனது இலக்காக எழுதி வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். சூர்யவன்ஷியின் பேச்சு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இலக்கை அடைந்ததில் மகிழ்ச்சி

ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் இலக்கை அடைவதற்கு நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை பார்ப்பேன் என்றும் தொடர்ந்து என்னுடைய இலக்கை அடைந்ததில் மகிழ்ச்சி என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் சிறந்த பேட்டிங் முதலான அனைத்து விருதுகளையும் வென்றது சிறப்பான உணர்வைத் தருவதாகவும் இந்த சீசனில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

தொடர்ந்து நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாட வேண்டுமானால் இன்னும் என்னை நிறைய மேம்படுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இனி அதில் அதிக கவனம் செலுத்துவேன்.

தொடர்ந்து விளையாடும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சூர்யவன்ஷி அள்ளிக்குவித்த விருதுகள்

நடப்பு ஐபிஎல் போட்டியின் வளர்ந்துவரும் வீரர், ஆரஞ்சு தொப்பி வெற்றியாளர், சூப்பர் சிக்ஸஸ் ஆஃப் தி சீசன், மிகவும் மதிப்புமிக்க வீரர்,

சூப்பர் ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன் என அனைத்து விருதுகளையும் 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வென்று சாதனை படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் வீரர் என்ற புகழுக்கு உரியவராகவும் விளங்குகிறார்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in