
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் :
ICC Women's ODI World Cup 2025 Tournament Prize Money : 50ஓவர்களை கொண்ட பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், வரும் 30ம் ( செப்டம்பர் ) தேதி முதல், நவம்பர் 2ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவும், இலங்கையும் இணைந்து இந்தப் போட்டியினை நடத்துகின்றன. வரும் 30ம் தேதி கவுகாத்தியில் நடைபெறும் முதல் போட்டியில் இந்தியாவும், இலங்கையும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.
8 நாடுகள் பங்கேற்பு :
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய 8 நாடுகள் களம் காண்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை 'ரவுண்டு-ராபின்' முறையில் லீக் சுற்றில் விளையாடும். முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள அரையிறுதிக்கு (அக்டோபர் 29 மற்றும் 30 தேதிகள் ) முன்னேறும். இறுதிப்போட்டி நவம்பர் 2ம் தேதி நடைபெறும்.
ரூ.122 கோடி பரிசுத் தொகை :
மகளிர் உலக கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது(ICC Women ODI World Cup 2025 Prize Amount). மொத்த பரிசுத் தொகை, கடந்த சீசனை (2022) விட 297 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ரூ. 122.5 கோடியாக வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க : Deepti Sharma: ICC டி20 மகளிர் தரவரிசை : 2ம் இடத்தில் தீப்தி சர்மா
கோபையை வென்றால் ரூ.40 கோடி :
இதில் கோப்பை வெல்லும் அணிக்கு மட்டும் ரூ. 40 கோடி வழங்கப்படும். இது, கடந்த சீசனை விட ரூ. 11.65 கோடி அதிகம். 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 20 கோடி கிடைக்கும். இது, கடந்த சீசனை விட 273 சதவீதம் அதிகம்.
அரையிறுதியோடு திரும்பும் இரு அணிகளுக்கு தலா ரூ. 9.89 கோடி கிடைக்கும். புள்ளிப்பட்டியலில் 5, 6வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ. 62 லட்சமும், கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ. 22 லட்சமும் வழங்கப்படும். லீக் சுற்றில், ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 30.29 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
=====