டி20, பட்டைய கிளப்பப் போகும் வீரர்கள்: ஆட்டத்திற்கு முன் ஒரு அலசல்

T20 World Cup 2026 : 20 அணிகள் மோதிக்கொள்ளும் ஐசிசி டி20 உலகக் கோப்பை திருவிழா தொடங்கியுள்ள நிலையில், இத்தொடர் நிச்சயம் பல இளம் வீரர்களுக்கான முக்கிய தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ICC Mens T20 World Cup 2026 Squads Players who are going to shine in T20s - An analysis before the match in Tamil
ICC Mens T20 World Cup 2026 Squads Players who are going to shine in T20s - An analysis before the match in TamilSource : ICC
2 min read

டி20 தான் இளமையான ஃபார்மட்

ICC Men's T20 World Cup 2026 Squads Players Names List : டி20 தான் கிரிக்கெட்டில் இளமையான ஃபார்மட்டாகும். டெஸ்ட், ஓடிஐ தொடருக்கு பின் டி20 கிரிக்கெட் வந்ததால் மட்டும் அது இளமையானது இல்லை,

பல இளம் வீரர்களுக்கான களத்தை உருவாக்கிக் கொடுத்ததாலும்தான் அது இளமையான பார்மட்டாக திகழ்கிறது என்பது கிரிக்கெட்டில் காலம் காலம் காலமாக நம்பபப்டும் ஒன்று என்பதால், இந்த பெயர் டி20 க்கு உரித்தானே ஒன்றே.

5 இளம் வீரர்கள் பட்டியல்

பிப்.7இல் தொடங்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரும் பல்வேறு இளம் வீரர்களுக்கான புதிய களத்தை அமைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் கிரிக்கெட் உலகமே உற்றுநோக்கும் ஐந்து இளம் வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.

ஜேக்கப் பெத்தல்: இங்கிலாந்து அணி இதுவரை இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறது. மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல இம்முறை தீவிரம் காட்டும்.

இந்திய அணிக்கு நிகராக பலம் வாய்ந்த அணியாக இங்கிலாந்து திகழ்கிறது, குறிப்பாக அதன் அதிரடி பேட்டிங். அதில், ஜேக்கப் பெத்தலும் முக்கிய இடத்தை பிடிக்கிறார்.

இவரது மிடில் ஆர்டர் அதிரடி பேட்டிங் மட்டுமின்றி இடதுகை சுழற்பந்துவீச்சும் இங்கிலாந்து அணிக்கு பெரியளவில் உதவும் என்று நம்பப்படுகிறது.

மதீஷா பதிரானா: பேபி மலிங்கா என்றழைக்கப்படும் பதிரானா தான் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். இலங்கை நாக்-அவுட் போட்டிகளுக்கு தகுதிபெற வேண்டும் என்றால் நிச்சயம் பதிரானா பட்டையை கிளப்ப வேண்டும்.

இலங்கை அணி தனது சொந்த மண்ணில் வேறு விளையாடுவதால் பதிரானாவுக்கும் அது சாதகமாகும், அவரது திறமை முழுமையாக வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

19 வயதில் பட்டைய கிளப்பும் குவேனா மஃபாகா

குவேனா மஃபாகா: தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சு ஆப்ஷன்களில் இவரும் ஒருவர். இவரது வேரியேஷன்கள் பெரிதும் பாராட்டத்தக்கது. ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு டி20 லீக் தொடர்களில் கலக்கி வருகிறார்.

தனக்கென தனி இடத்தையும் பிடித்து வருகிறார். ஆனால் இவருக்கு வயது 19 என்பதும் இவர் தற்பொழுதே பெரும் பாராட்டுக்குரியவராக வலம் வருவதால், வரும் காலத்தில் இவரின் பங்களிப்பு இவரின் அணிக்கும் முழு பலம் சேர்க்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

டெவால்ட் பிரெவிஸ்: தென்னாப்பிரிக்காவின் மிடில் ஆர்டரில் இவர் மிகப்பெரும் பலமாக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் இவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார்.

கடந்த ஓராண்டாகவே இவர் உச்சக்கட்ட பார்மில் உள்ளார். டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா கோப்பையை நெருங்குவதற்கு பிரெவிஸின் அதிரடி முக்கியமாகும் என்று தெரியவருகிறது.

அபிஷேக் சர்மா: 25 வயதான இவர் இந்திய அணியின் அதிரடி ஓபனராக விளங்கி வருகிறார்.

2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின், இந்திய அணி அனைத்து டி20ஐ தொடர்களையும் வெல்ல அபிஷேக் சர்மாவின் அதிரடியும் முக்கிய காரணமாகும்.

இந்த தொடரில் அபிஷேக் சர்மாவின் அதிரடி தொடர்ந்தால் வரலாற்றில் முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை நடப்பு சாம்பியன் அணி வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in