ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை, ரூ.82 கோடி பரிசு : 2024 ஐ விட 10 சதவீதம் அதிகம்! : பட்டம் வென்றால் 28 கோடி...

நடப்பாண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு ரூ.82 கோடி பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
ICC Women's T20 World Cup prize money of Rs 82 crore; 10 percent more than the amount given in 2024
ICC Women's T20 World Cup prize money of Rs 82 crore; 10 percent more than the amount given in 2024 google
1 min read

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற இருக்கிறது .

இதில் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. 24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

தொடக்க ஆட்டத்தில் ஜூன் 12-ம் தேதி இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பர்மிங்காமில் நடைபெற இருக்கிறது .

ரூ.82 கோடி பரிசு

நடப்பாண்டு தொடருக்கான பரிசுத் தொகையை நேற்று ஐசிசி அறிவித்தது. மொத்த பரிசுத் தொகை ரூ.82 கோடி தரப்படும் என்று அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டை விட அதிகமான பரிசு தொகை

இது 2024-ம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையைவிட 10 சதவீதம் அதிகமாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.21.8 கோடி வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

வெற்றி பெரும் அணிகளுக்கான பரிசு தொகை விவரம்

இந்த நிலையில் ஐசிசி வெற்றி பெரும் அணிகளுக்கு கீழ்கண்ட பரிசு தொகையை அறிவித்துள்ளது

அதன்படி 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி பரிசு தொகையாக அறிவித்துள்ளது . அரை இறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா ரூ.6.29 கோடியும், லீக் சுற்றில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.29 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது .

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் குறைந்தபட்சம் ரூ.2.06 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

=======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in