
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி :
India Squad for England 4th Test Match 2025 : இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் 2ல் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் ஆட்டத்தில் மட்டும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகள் :
எனவே, அடுத்த இரு ஆட்டங்களும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவால் தொடரை கைப்பற்ற முடியும். குறைந்த பட்சம் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று, ஒரு ஆட்டம் டிரா ஆனாலும், தொடர் சமநிலையில் முடியும்.
இந்திய வீரர்கள் காயம் :
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான நிதிஷ்குமாருக்கு, ஜிம் போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநார் பிடிப்பு இருப்பது தெரிய வந்தது. மற்றொரு வீரரான அர்ஷ்தீப் சிங்கும்(Arshdeep Singh Injury) பயிற்சியின் போது காயமடைந்து இருக்கிறார். எனவே, இவர்கள் இருவரும் 4வது டெஸ்ட்டில் இருந்து விலகி இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
4 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
India Squad for England 4th Test : சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்) , ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன்
அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ஜடேஜா, துருவ் ஜூரல் (WK), வாஷிங்டன் சுந்தர்
ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்.
மேலும் படிக்க : 9,742 கோடி வருமானம் : ஒரே ஆண்டில் அள்ளிய பிசிசிஐ
சாதிக்குமா இந்தியா:
வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைந்து ஆட்டத்தில் பங்கேற்காமல் போவது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. விலகியவர்களை தவிர்த்து, அணியில் இடம்பெற்று இருப்பவர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே வெற்றி கிட்டும்.
======