சாதனை பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் : தொடர் சாதனையில் இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா
India vs West Indies Test Match 2025 Highlights : வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கி ரன்கள் குவிக்க தொடங்கியது. 38 ரன்கள் எடுத்த ராகுல் 19வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் தமிழக வீரர் சாய்சுதர்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். அடுத்தடுத்த ஓவரில் சாய் சுதர்சன் 57 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்தார்.
ஜெய்ஸ்வால் சாதனை
தொடர்ந்து ஸ்கோர் மெஷினாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் 101 ரன்கள் குவித்தார். 50 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புடன் 196 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. ஜெய்ஸ்வால் அறிமுகமானபிறகு அவர் மட்டுமே 7 சதங்கள் அடித்திருக்கும் வேளையில், மற்ற இந்திய தொடக்க வீரர்கள் 6 மட்டுமே அடித்துள்ளார்கள். டெஸ்ட்டில் 49.89 சராசரியை வைத்துள்ள ஜெய்ஸ்வால் மே.இ.தீ. அணிக்கு எதிராக மட்டுமே கிட்டதட்ட 100 சராசரி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : இந்தியாவின் மிகப்பெரிய 2 வது ஸ்டேடியம் தயார்! இவ்வளவு கோடியா?
23 வயதாகும் ஜெய்ஸ்வால் சச்சின் சாதனையை முறியடிப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகி றது.ஜெய்ஸ்வால் 3,000 சர்வதேச ரன்களை கடந்துள்ளார் என்ற நிலையில் டெஸ்ட்டில் மட்டுமே 75 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

