

யு19 உலகக்கோப்பை போட்டிகள்
India beats England in Under-19 Cricket World Cup final 2026 : யு19 உலகக்கோப்பை தொடரானது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் நிலையில் ,லீக் சுற்றுகளில் இருந்து 12 அணிகள் சூப்பர் 6 பிரிவுகளுக்கு முன்னேறின.
இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதி போட்டி
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
2ஆவது அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் .முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 41.1 ஓவர்களில் இலக்கை எடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
412 ரன்கள் - மெகா இலக்கு
இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சூர்யவன்ஷி அவுட் ஆகும்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 26வது ஓவர் நடந்துகொண்டிருந்த நிலையில் அதன்பிறகான 24 ஓவர்களில் இந்திய அணியின் ரன் ரேட் வெகுவாக குறைந்தது.
விக்கெட்டும் மளமளவென விழுந்தது. இதனால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்களை எடுத்தது. கோப்பை வெல்ல இங்கிலாந்து அணிக்கு 412 ரன்கள் என்கிற மெகா இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அபார வெற்றி
விக்கெட் சரிவை சந்தித்தது இங்கிலாந்து அணி ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் காலேப் பால்கனர் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு ஒரு நம்பிக்கையை அளித்தார் ,அவர் சதம் கடந்து ஆடினாலும் அவருக்கு கைகொடுக்க மற்ற வீரர்கள் தவறிய காரணத்தினால் இங்கிலாந்து அணி விக்கெட்களை இழந்தது.
311 ரன்களுக்கு ஆல்அவுட்
கடைசியாக 115 ரன்களுக்கு காலேப் பால்கனரும் அவுட் ஆக 40.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றிஅபார வெற்றி பெற்றது .
சூரியவன்ஷியின் சாதனை
யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதமடித்த 3வது இந்திய வீரராகவும், 6வது உலக வீரராகவும் வரலாறு சாதனை படைத்துள்ளார் சூர்யவன்ஷி.
சிக்சர் நாயகன்
13 வயதில் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டது , 14 வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகி முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டது என இவரின் சாதனையை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
2 தமிழர்களின் பங்கு
இந்த யு19 உலகக்கோப்பை வெற்றிக்கு இரண்டு தமிழர்களின் பங்கு இந்த ஆட்டத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படுகி்றது அந்தவகையில்
தமிழகத்தைச் சேர்ந்த அம்ரிஷ் 3 விக்கெட்டும், மற்றொரு தமிழக வீரரான தீபேஷ் தேவேந்திரன் 2 விக்கெட்டும் வீழ்த்தி மேலும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர் .
6 முறை யு19 வெற்றி கோப்பை
யு19 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா 6வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது . இதன்மூலம் 6 முறை யு19 உலகக்கோப்பையை வென்ற ஒரே அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.
அடுத்த வெற்றி இலக்கத்தில் ஆஸ்திரேலியா 4 முறை உலகக்கோப்பயையும் வென்றுள்ளது .கடைசியாக 2022ம் ஆண்டு இந்தியா யு19 உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.