சர்வதேச டி 20 அணிகள் தரவரிசை பட்டியல்
சர்வதேச டி 20 அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் 3 முறை சாம்பியனான இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது கூறிப்பிடத்தக்கது
கணகிடப்பட்ட புள்ளிகள்
தொடர்ந்து மூன்றாவது முறையாகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது. சமீபத்திய டி20 அணிகளின் தரவரிசையானது,
மே 2025 முதல் விளையாடப்பட்ட அனைத்துப் போட்டிகளையும் 100 சதவீதமாகவும், அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் விளையாடப்பட்ட போட்டிகளை 50 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுளது
நடப்பு சாம்பியன் விவரம்
நடப்பு சாம்பியனான இந்திய அணி 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. அதற்கு அடுத்த இங்கிலாந்து அணி 262 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 258 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
மற்ற அணிகளின் பட்டியல்
நியூஸிலாந்து (247), தென் ஆப்பிரிக்கா (244), பாகிஸ்தான் (240), மேற்கு இந்தியத் தீவுகள் (233), வங்கதேசம் (225), இலங்கை (221), ஆப்கானிஸ்தான் (220) ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10-வது இடங்களில் இருகிறது.
==============