
இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்திய அணி பேட்டிங் செய்ய தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
42 ரன்னில் ராகுல் ஆட்டமிழந்தார். அறிமுக வீரராக களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் ரன் எடுக்காமல் அவுட்டானார்.
பின்னர் ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் சுப்மன் கில் இணை சேர்ந்தார். ஜெய்ஸ்வால், 123 பந்துகளில் சதமடித்தார். சிறிது நேரத்தில் கில்லும், 56 பந்துகளில் 50 ரன்னை எட்டினார்.
தேனீர் இடைவேளைக்கு பின், ஜெய்ஸ்வால் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு கேப்டன் கில்லுடன் கைகோர்த்த துணை கேப்டன் ரிஷப் பண்ட் அணியினை ஸ்கோரை உயர்த்த உதவினார்.
சுப்மன் கில் சதம் அடிக்க, ரிஷப் அரைசதம் எடுத்தார்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்து இருந்தது.
இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் 350 ரன்கள் குவித்தது இதுவே முதன்முறை.
=====