
நான்காவது டெஸ்ட் போட்டி :
Joe Root Test Records 2025 : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி, மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா 358 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பின்னர் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 544 ரன்கள் எடுத்து இருக்கிறது.
பிராட்மேன் சாதனை முறியடிப்பு :
அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட், சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து மண்ணில் அவர் அடிக்கும் 9வது சதம் இதுவாகும். அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனையை ஜோ ரூட் முறியடித்து உலக சாதனை(Joe Root Beats Don Bradman Record) படைத்து உள்ளார். இங்கிலாந்து மண்ணில் கிரிக்கெட் டெஸ்ட்டில் 8 சதங்களை டான் பிராட்மேன் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அதை ஜோ ரூட் முறியடித்து உள்ளார்.
ரிக்கி பாண்டிங் சாதனை முறியடிப்பு :
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்துள்ள பேட்ஸ்மேன்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், 15,921 ரன்கள் எடுத்து இருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 13,378 ரன்களுடன் 2வது இடத்தில் இருந்தார். 13, 409 ரன்களை எடுத்துள்ள ஜோ ரூட்(Joe Root Most Runs), தரவரிசையில் 2ம் இடத்திற்கு முன்னேறினார்.
ஜோ ரூட்டிற்கு ரிக்கி பாண்டிங் வாழ்த்து :
4வது டெஸ்ட்டில்(IND vs ENG 4th Test 2025) அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட், 120 ரன்களை எட்டிய போது, பாண்டிங் சாதனையை முறியடித்து தரவரிசையில் 2ம் இடத்திற்கு முன்னேறினார். வர்ணனையாளராக இருந்த ரிக்கி பாண்டிங்(Ricky Ponting), ”ஜோ ரூட்டிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இன்னும் ஓர் இடம் தான் முன்னேற வேண்டும். 2, 500 ரன்கள் எடுத்தால் சச்சின் சாதனையை எட்டிப் பிடிக்கலாம். ஜோ ரூட் உங்களால் அது முடியும்” என்று பாண்டிங் பாராட்டினார்.
மேலும் படிக்க : ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை : ஜோ ரூட் மீண்டும் முதலிடம்
சாதனை நாயகன் ஜோ ரூட் :
மான்செஸ்டர் டெஸ்ட்டில் 150 ரன்கள் எடுத்து ரூட் ஆட்டமிழந்தார். மான்செஸ்டர் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில், டெஸ்ட் போட்டியில் 1000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ஜோ ரூட்(Joe Root).
====