

உலககோப்பை டி20 போட்டிகள்
India vs South Africa T20 World Cup warm-up match highlights in Tamil : உலககோப்பை போட்டி என்றாலே,கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் எதிரொலிக்கும், அதிலும் உலககோப்பை டி20 என்றால் இருக்கும் வேலையை மறந்து, இருக்கும் திரை வழியாக உட்கார்ந்து பார்க்க ஆரம்பமாகி ஆழ்ந்து விடுவர். இதுவரை இந்தியா 2007 மற்றும் 2024 என இரண்டு டி20 உலகக்கோப்பையை தழுவியுள்ளன. இந்த வெற்றியை இதுவரை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், வருகிற டி20 உலககோப்பைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் உலகம் முழுதும் காத்திருக்கின்றனர்.
பயிற்சி போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா
இந்நிலையில், உலகக்கோப்பை டி20 போட்டிகள் வருகிற 7ம் தேதி துவங்கவுள்ள நிலையில், நவி மும்பையில் நேற்று, இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையில் பயிற்சி போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களான இஷான் கிஷண் 53 ரன்கள் (20 பந்து, 7 சிக்சர், 2 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார், அபிஷேக் சர்மாவும் தனது ஆட்டத்தை 24 ரன்களுடன் முடித்துக்கொண்டு காயத்துடன் வெளியேறினர். இவர்களைதொடர்ந்து, அடுத்துவந்த வீரர்கள் அதிரடியாக விளையாடினர். திலக் வர்மா 45 ரன்(19 பந்து), கேப்டன் சூர்யகுமார் 30 ரன்(16 பந்து) எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 240 ரன் விளாசியது. 2வது இன்னிங்சை துவங்கிய சவுத் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்தது. இதனால் இந்திய அணி 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலககோப்பை 2026 தொடக்கம்
வருகிற 7 ஆம் தேதி தொடங்கும் உலககோப்பை, முதல் நாள் போட்டியாக பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து மோதவுள்ளது. முதல் நாளான 7 ஆம் தேதி அன்றே, காலை தொடங்கி இரவு வரை என மொத்தம் 3 போட்டிகள் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான்- நெதர்லாந்தை தொடர்ந்து, வெஸ்ட் இன்டீஸ்- ஸ்காட்லான்ட், இரவு நேர ஆட்டமாக இந்தியா- யூஎஸ்ஏ என ஆட்டம் நடைபெறுகிறது. முதல் நாள் போட்டி என்பதால் இந்த 3 போட்டிகளுக்கும் அனைத்து நாட்டு ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் இந்த ஆண்டு டி20 உலகோப்பையை வெல்லும் அணி யார் என்று கேள்வி வட்டமிட்டு வரும் நிலையில், அவரவர் நாட்டினருக்கும், தனது நாட்டை மறந்து வேறு நாட்டினராக இருந்தாலும், பிடித்த விளைாயட்டு வீரர் இருக்கும் அணியே வெற்றி பெரும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கருத்துக்களையும். விமர்சனங்களையும், மீம்ஸ் மற்றும் டெம்ப்ளேட்ஸ்களாக உருவாக்கி சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.