தங்கம் வென்ற மகளிர் இந்திய அணி- வைரலாகும் கண்ணகி நகர் கார்த்திகா!

Chennai Kannagi Nagar Karthika Viral: 3வது முறையாக நடைபெறும் ஆசிய இளைஞர்களுக்கான விளையாட்டு தொடரில், கபடி போட்டியில் தமிழக வீராங்கனை சென்னை கார்த்திகாவுடன் இந்திய அணி தங்கம் வென்று அசத்தல்.
India Wins Gold in Kabaddi at Asian Youth Games 2025 Chennai Kannagi Nagar Karthika Goes Viral Read News in Tamil
India Wins Gold in Kabaddi at Asian Youth Games 2025 Chennai Kannagi Nagar Karthika Goes Viral Read News in TamilImage Courtesy : Asian Youth Games 2025 (Olympics)
2 min read

இந்திய வீரர்கள் பங்கேற்பு

Chennai Kannagi Nagar Karthika Viral : ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள் அதிகராப்பூர்வமாக அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 31ஆம் தேதிவரை நடைபெறுகிறது. அக்டோபர் 19ஆம் தேதியே சில விளையாட்டு போட்டிகள் தொடங்கியதாகவும் தெரிகிறது. இந்த தொடரில் இந்தியா தரப்பில் 21 விளையாட்டுகளில் 119 பெண்கள், 103 ஆண்கள் என மொத்தம் 222 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தடகள போட்டிக்கு 31 பேர், கபடிக்கு 28 பேர், ஹேண்ட்பால் 16 பேர், குத்துச்சண்டை 14 பேர் உள்ளன. டாக்வாண்டோ, மல்யுத்தம், பளூதூக்குதல் ஆகிய விளையாட்டுகளில் தலா 10 வீரர்கள் விளையாடுகின்றனர்.

முந்தைய பதக்கம்

முன்னதாக, 2009 ஆம் ஆண்டு நடந்த முதல் ஆசிய இளைஞர் விளையாட்டு தொடரில் 5 தங்கத்துடன் 11 பதக்கங்களை இந்தியா வென்றது. இதைத்தொடர்ந்து, 2013 ஆசிய இளைஞர் விளையாட்டு தொடரில் 3 தங்கங்களுடன் 14 பதக்கங்களை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில், நடப்பு தொடரில் இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்லம் என 15 பதக்கங்களுடன் 5வது இடத்தில் உள்ளது. இதில் இந்தியா ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணிகள் தலா ஒரு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளனர்.

இந்திய அணியில் சென்னை கண்ணகி நகர் வீராங்கனை

இதில் இந்திய மகளிர் கபடி அணியானது 4 லீக் போட்டிகள், 1 இறுதிப்போட்டி என 5 போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தாய்லாந்து அணிக்கு எதிராக முதல் போட்டியில் 70-23, வங்கதேசத்திற்கு எதிராக 46-18, இலங்கைக்கு எதிராக 73-10, ஈரானுக்கு எதிராக 59-26 என தொடர்ச்சியாக வெற்றி பெற்று, அக். 23ஆம் தேதி நடந்த இறுதிப்போட்டியில் ஈரானுடன் மீண்டும் மோதி அசைக்குமுடியாத வெற்றியை பதிவு செய்து தங்கத்தை வென்று அசத்தியுள்ளது.

கண்ணகி நகர் கார்த்திகா பேச்சு

மொத்தமாக ஆரம்பத்தில் இருந்து வெற்றியை பதிவு செய்த மகளிர் கபடி இந்திய அணி 312 புள்ளிகளை வென்று, வெறும் 89 புள்ளிகளை மட்டுமே எதிரணியிடம் இழந்திருப்பது மகளிர் அணியின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.இந்த வெற்றி குறித்து மனம் திறந்துள்ள கார்த்திகா, ” கண்ணகி நகரை பிராண்ட்டாக மாற்றுவோம் அதுவே முதன்மையான நோக்கம் என்றும் கண்ணகி நகர் என்றாலே அது 'குற்றவாளிகளின் கூடாரம்' என்பது போன்ற மாயைகள் பொதுதளத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைப்படங்களில் கூட பல தவறான காட்சிப்படுத்துதல்களை பார்க்க முடியும். அப்படியிருக்க, தானும் தனது அணியும் சேர்ந்து கபடியில் தொடர் வெற்றிகளை குவித்து கண்ணகி நகர் குறித்து பேச்சுக்களை போக்குவோம் என ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : 2030 Commonwealth Games : 2030ல் அகமதாபாத்தில் நடத்த வாய்ப்பு

கார்த்திகாவுக்கு குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவிற்காக ஒரு தமிழராக இருந்து வெற்றியை பதிவு செய்துள்ள கார்த்திகாவை அவரது அணியில் எக்ஸ்பிரஸ் கார்த்திகா என்று அழைப்பார்களாம். இந்நிலையில், வெற்றி பதிவு செய்துள்ள இந்திய மகளிர் கபடி அணிக்கும், தமிழரான சென்னையை சேர்ந்த கண்ணகி நகர் கார்த்திகாவுக்கும், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in