2030 Commonwealth Games : 2030ல் அகமதாபாத்தில் நடத்த வாய்ப்பு

Ahmedabad Recommended to host 2030 Commonwealth Games : 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை அகமதாபாத் நகரில் நடத்த பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.
Ahmedabad has been recommended to host the 2030 Commonwealth Games
Ahmedabad has been recommended to host the 2030 Commonwealth Games
1 min read

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்

Ahmedabad Recommended to host 2030 Commonwealth Games in India : 2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கு தேவைப்படும் விண்ணப்பத்தை இந்தியா அளிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தெரிவித்திருந்தனர். அதன்படி, இந்தியா சார்பில் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து அதிகாரப் பூர்வமாக விண்ணப்பிக்கப்பட்டது.

அகமதாபாத்தில் நடத்த பரிந்துரை

இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிகள் நிர்வாகக் குழு, 2030 காமன்வெல்த் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடத்த பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவல் காமன்வெல்த் போட்டிகளில் அங்கம் வகிக்கும் நாடுகளின் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும். அதன் பிறகு, நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு 2030ல் எங்கு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

களத்தில் நிற்கும் நைஜீரியா

2023ம் ஆண்டு நைஜீரியாவின் Abuja நகரில் நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த 2010ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாடு போட்டிகள் நடத்தப்பட்டன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : 2030 Commonwealth Games : ஏலத்தில் பங்கேற்கிறது இந்தியா

2026 காமன்வெல்த் போட்டிகள்

2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற இருக்கிறது. காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in