Chess : கிராண்ட்ஸ்லாம் செஸ் : பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோல்வி

Praggnanandhaa Defeats Magnus Carlsen : ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் தோற்கடித்தார்.
Rameshbabu Praggnanandhaa Defeats World No 1 Chess Player Magnus Carlsen in Freestyle Chess Grand Slam
Rameshbabu Praggnanandhaa Defeats World No 1 Chess Player Magnus Carlsen in Freestyle Chess Grand Slamhttps://x.com/rpraggnachess
1 min read

ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் :

Praggnanandhaa Defeats Magnus Carlsen : ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டி அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வெகாஸ்(Las Vegas) நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

கார்ல்சனுடன் மல்லுக்கட்டிய பிரக்ஞானந்தா :

இந்தியாவின் 19 வயதே ஆன இளம் கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, நார்வேவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். அசைக்க முடியாத வீரரான கார்ல்சனை அவர் தீரத்துடன் எதிர்கொண்டார். வெள்ளை நிற காயுடன் விளையாடிய பிரக்ஞானந்தா வெறும 39 நகர்த்தலில், 5 முறை உலக சாம்பியனான கார்ல்சனை தோற்கடித்தார்.

மேலும் படிக்க : கிராண்ட் செஸ் தொடர் : பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்

அசத்திய பிரக்ஞானந்தா :

இதன்மூலம், கிளாசிக்கல், ரேபிட் மற்றும் பிலிட்ஸ் என மூன்று வடிவங்களிலும் கார்ல்சனை தோற்கடித்த வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா(Praggnanandhaa) பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. பாரிஸ் செஸ் போட்டியில் 9 வது இடத்துடன் மட்டுமே பிடித்து ஏமாற்றம் அளித்த பிரக்ஞானந்தாவுக்கு, இந்த வெற்றி புது நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஒய்ட் பிரிவில் முதலிடம் :

இந்த வெற்றியின் மூலம் குரூப் ஒயிட் பிரிவில் 4.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தை பிடித்துள்ளார். சக இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதே குரூப்பில் மற்றொரு இந்தியர் விதித் குஜராத்தி கடைசி இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறினார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in