மகளிர் ’உலக செஸ்’ பைனலில் ’திவ்யா’ : வரலாற்று சாதனை

Divya Deshmukh in FIDE Womens World Cup Final 2025 : பெண்களுக்கான செஸ் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை திவ்யா, புதிய சாதனை படைத்து இருக்கிறார்.
Indian Chess Player Divya Deshmukh Reaches FIDE Women's World Cup Final 2025
Indian Chess Player Divya Deshmukh Reaches FIDE Women's World Cup Final 2025 https://x.com/OnTheQueenside
1 min read

சதுரங்கத்தில் சாதிக்கும் இந்தியர்கள் :

Divya Deshmukh in FIDE Womens World Cup Final 2025 : மூளை விளையாட்டு என்று அழைக்கப்படும் செஸ், உலக அளவில் பிரபலமாக இருந்தாலும், அதில் இந்தியர்களின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆண்களுக்கான உலகக் கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்தது.

மகளிர் செஸ் உலகக் கோப்பை :

இதேபோன்று, ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர்(FIDE Chess Women World Cup) நடக்கிறது. 46 நாடுகளை சேர்ந்த 107 பேர் இதில் பங்கேற்று உள்ளனர். 'டாப்-3' இடங்களை பெறுவோர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம். 'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் ஹம்பி, திவ்யா என இரு வீராங்கனைகள் முதன் முறையாக முன்னேறி, வரலாறு படைத்தனர்.

இந்திய வீராங்கனை திவ்யா :

உலகத் தரவரிசையில் 18வது இடத்திலுள்ள, 19 வயது வீராங்கனை திவ்யா(Divya Deshmukh), 8ம் இடத்தில் உள்ள சீனாவின் வலிமையான, முன்னாள் உலக சாம்பியன், ஜோங்இயை சந்தித்தார். முதல் போட்டி 'டிரா' ஆக, ஸ்கோர் 0-5.0-5 என இருந்தது. நேற்று இரண்டாவது போட்டி நடந்தது. இம்முறை திவ்யா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.

இறுதிப் போட்டியில் திவ்யா :

5 மணி நேரம், 45 நிமிடம் நடந்த பரபரப்பான போட்டியில், 101 வது நகர்த்தலில் திவ்யா வெற்றி பெற்றார். இதன் மூலம் உலக செஸ் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்து இருக்கிறது. மேலும் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர் உறுதி செய்து இருக்கிறார்.

ஹம்பி பங்கேற்ற போட்டி டிரா :

உலகத் தரவரிசையில் 'நம்பர்-5' வது இடத்திலுள்ள இந்தியாவின் ஹம்பி, 3வது இடத்தில் இருக்கும் சீனாவின் லெய் டிங்ஜீயுடன் மோதினார். முதல் போட்டி 'டிரா' ஆனது. நேற்று 2வது போட்டி நடந்தது. வெள்ளை நிற காய்களுடன் ஹம்பி விளையாடினார். 50 வது நகர்த்தலுக்குப் பின் ஹம்பி ஆதிக்கம் செலுத்தினார். இருப்பினும் வாய்ப்பை தவறவிட்ட ஹம்பி, 75 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். ஸ்கோர் 1.0-1.0 என சமனில் உள்ளது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in