

டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்
Hardik Pandya joins elite club with 100 T20I wickets, 1000+ runs : இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய 3 -வது டி20 ஆட்டம் இமாச்சல பிரதேசத்திலுள்ள தரம்சாலாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸின் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் வீழ்த்திய 100வது விக்கெட்டாகும் இது.
100 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர்
சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பாண்டியா பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்தச் சாதனையை அர்ஷ்தீப் சிங் (112 விக்கெட்), ஜஸ்பிரீத் பும்ரா (101 விக்கெட்) ஆகியோர் செய்துள்ளனர்.
முதல் இந்திய வீரர் பாண்டியா
ஏற்கனவே அவர் சர்வதேச டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்து இருப்பதால், 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த சாதனையை உலக அளவில் ஷாகிப் அல் ஹசன், சிக்கந்தர் ராசா மற்றும் முகமது நபி ஆகியோர் மட்டுமே செய்துள்ள வேளையில் நான்காவது சர்வதேச வீரராக ஹார்டிக் பாண்டியா சாதனை பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருண் சக்ரவர்த்தி 50 விக்கெட்டுகள்
மூன்றாவது போட்டியின் போது வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 50 விக்கெட்களை சாய்த்துள்ளார் வருண்.
32 போட்டிகளிலேயே 50 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை எட்டியுள்ளார் வருண். இந்த வரிசையில் குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
====