
ரவிச்சந்திரன் அஸ்வின் :
Ravichandran Ashwin Retirement From IPL : இந்தியாவை சேர்ந்த ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின், 2009ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பிறகு 2010ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுகளில் பங்கேற்க தொடங்கினார்.
தனது ஐபிஎல் ஓய்வு அறிவிப்பை சமூக வலைதள பதிவு மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்தார். கடந்த ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 38 வயதான அவர் கடந்த 2009-ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகே 2010-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
ஐபிஎல் அணிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் :
சென்னை சூப்பர் கிங்ஸ், ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
கடந்த சீசனில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் விளையாடி இருந்தார். அவரை சிஎஸ்கே அணி 9.75 கோடிக்கு ஏலம் எடுத்து இருந்தது. 3வது பேட்டிங் வரிசையில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அவர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 9 போட்டிகளில் விளையாடிய அவர், 283 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவர் ராஜஸ்தான் அணிக்கு செல்ல இருக்கிறார் என்று கூறப்பட்டது.
221 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் :
ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், மொத்தம் 221 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 833 ரன்களை பேட்ஸ்மேனாக எடுத்துள்ளார். இந்தநிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்து(Ravichandran Ashwin Retirement) இருக்கிறார்.
மேலும் படிக்க : T20ல் 7,500 ரன்கள், 500 விக்கெட்டுகள் : "சகீப் அல் அசன்” சாதனை
டி20 லீக் தொடர்களில் விளையாடுவார் :
இது தொடர்பாக அஸ்வின் வெளியிட்டுள்ள பதிவிலை, “சிறப்புமிக்க நாளில் சிறப்பான தொடக்கம். ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று சொல்வதுண்டு. ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது காலம் முடிந்துவிட்டது. ஆனால், உலக அளவில் நடைபெறும் மற்ற டி20 லீக் தொடர்களில் நான் விளையாடுவதற்கான காலம் தொடங்குகிறது.
ஐபிஎல் அணிகளுக்கு அஸ்வின் நன்றி :
இத்தனை ஆண்டுகளாக எனக்கு அற்புத நினைவுகளையும், உறவுகளையும் தந்த எனது ஐபிஎல் அணிகளுக்கு நன்றி. முக்கியமாக எனக்கு இத்தனை நாட்களாக அனைத்தும் வழங்கி வந்த ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ-க்கு நன்றி. என்னுடைய அடுத்த கட்டத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளேன்” என அஸ்வின்(Ravichandran Ashwin Tweet) கூறியுள்ளார்.
==============