1,747 பந்துகள்! 50 விக்கெட்டுகள்!: ஜஸ்பிரித் பும்ரா அசத்தலான சாதனை

Jasprit Bumrah Test Wickets Record : இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார்.
Indian fast bowler Jasprit Bumrah set a record by taking fastest 50 wickets
Indian fast bowler Jasprit Bumrah set a record by taking fastest 50 wicketshttps://x.com/BCCI
1 min read

வெஸ்ட் இண்டீசை சுருட்டிய இந்தியா :

Jasprit Bumrah Test Wickets Record : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியை 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது(India vs West Indies Test Match). இந்திய் அணி. முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வெறும் 44.1 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கதையை இந்திய பவுலர்கள் முடித்தனர்.

சிவப்பு பந்தில் ஜஸ்பிரித் பும்ரா மேஜிக் :

வழக்கம் போன்று சிவப்பு பந்தில் மேஜிக்கை நிகழ்த்தி காட்டினார் ஜஸ்பிரித் பும்ரா(Jasprit Bumrah Test Wickets Record). சொந்த மண்ணில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். சொந்த மண்ணில் 50 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு ஜஸ்பிரித் பும்ராவுக்கு 1,747 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டது.

சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா :

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் சொந்த மண்ணில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில், குறைவான பந்துகளில் சாதனை படைத்து இருப்பது ஜஸ்பிரித் பும்ரா(Jasprit Bumrah Stats) தான். இந்த சாதனையை படைக்க பும்ராவுக்கு வெறும் 24 இன்னிங்ஸ்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இதற்கு முன்பாக ஜவகல் ஸ்ரீநாத் 23 இன்னிங்ஸில் சொந்த மண்ணில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்தப் பட்டியலில் கபில் தேவ் 25 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் இருக்கிறார்.

மேலும் படிக்க : வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 தமிழக வீரர்கள்- வெளியான அசத்தல் அப்டேட்!

இஷாந்த் சர்மா, முகம்மது சமி ஆகியோர் 27 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருவது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in