இந்திய ஆண்கள் கபடி அணி அசத்தல் : ஆசியா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று மீண்டும் சாதனை ...

ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கபடி இறுதிப்போட்டியில் ஈரானை 40-34 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, நடப்பு தொடரில் இந்தியாவுக்கு 4ஆவது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளது...
Indian mens kabaddi  Team has won Gold medal once again in Asian Games 2026 followed by Last Time
Indian mens kabaddi Team has won Gold medal once again in Asian Games 2026 followed by Last TimeGoogle
1 min read

தங்கத்தை கைப்பற்றிய இந்திய அணி :

ஜப்பானின் ஐச்சி நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கபடி இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஈரான் அணிகள் மோதின.

கபடி உலகின் இரண்டு வலுவான அணிகள் நேருக்கு நேர் மோதியதால் தொடக்கம் முதலே போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

முதல் பாதியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்த நிலையில், ஒரு கட்டத்தில் ஆட்டம் சமநிலையை நோக்கி நகர்ந்தது. எனினும், இறுதிக்கட்டத்தில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் 40-34 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.

பழி தீர்த்த இந்திய அணி :

2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தொடர் தங்கப் பயணத்திற்கு முடிவு கட்டிய அணி ஈரான். அந்த தொடரில் இந்தியா தங்கம் வெல்லத் தவறியது.

ஆனால் 2022 ஹாங்சோ மற்றும் தற்போது 2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈரானை வீழ்த்தி இந்தியா தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

10 எடிஷனில் 9 முறை தங்கம் வென்று மீண்டும் சாதனை :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி 1990 முதல் இடம்பெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி 1990 முதல் 2014 வரை தொடர்ந்து 7 தங்கங்களை வென்றது.

2018-ல் ஈரானிடம் பட்டத்தை இழந்த இந்தியா, 2022 மற்றும் 2026-ல் மீண்டும் தங்கம் வென்று, 10 எடிஷன்களில் 9 முறை சாம்பியன் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பதக்கப் பட்டியலில் இந்தியா

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக மகளிர் கிரிக்கெட், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் மகளிர் கபடியில் இந்தியா தங்கம் வென்றிருந்தது.

ஆடவர் கபடி அணியின் வெற்றியால் இந்தியாவின் பதக்க வேட்டை மேலும் வலுப்பெற்றுள்ளது

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in