

மகளிர் டி20 உலகக்கோப்பை
இந்திய மகளிர் அணியில் முக்கியமான வீராங்கனைகளில் ஒருவர் தீப்தி சர்மா. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய மகளிர் அணி.
5 விக்கெட்டுகளை சாய்த்த தீப்தி சர்மா
தன்னுடைய அபாரமான பந்துவீச்சு மூலம் 5 விக்கெட்டுகளை சாய்த்த தீப்தி சர்மாவால் 17 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான்.
4 ஓவரில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்த தீப்தி சர்மா, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்தார்.
சர்வதேச கிரிக்கெட் - 350 விக்கெட்டுகள்
சர்வதேச கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை கடந்து மாபெரும் மைல்கல்லை எட்டினார் தீப்தி சர்மா. கோஸ்வாமிக்கு பிறகு 350 விக்கெட்டுகளை கடந்த 2வது இந்திய வீராங்கனை தீப்தி சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்
பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனையாக உலக சாதனை படைத்தார் தீப்தி சர்மா.
டி20 கிரிக்கெட் 165 விக்கெட்டுகளுடன் இருந்த தாய்லாந்து வீரர் திபாச்சா புத்தவோங்கை பின்னுக்கு தள்ளினார் தீப்தி சர்மா.
======