டி20 உலகக் கோப்பை தொடர் : இந்திய அணி!, துணை கேப்டன் அக்சர்

Indian squad for T20 Mens World Cup 2026 Players List in Tamil : 2026ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை டி20 தொடருக்கான, இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian squad for T20 World Cup, which is scheduled to be held in 2026, has been announced
Indian squad for T20 World Cup, which is scheduled to be held in 2026, has been announcedGoogle
1 min read

கேப்டன் சூர்யகுமார் யாதவ்

India’s squad for ICC Men’s T20 World Cup 2026 announced : கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது. துணை கேப்டன் அக்சர் படேல், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. திலக்வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்குசிங், பும்ரா, ஹர்ஷித் ராணா உள்ளிட்டோருக்கு இடம்.

அணியில் இஷான் கிஷன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அணி இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சுப்மன் கில்லுக்கு கல்தா

சுப்மன் கில் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை

10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.

20 அணிகள் மோதல்

இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் மோதும்.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். இதன் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்ரவரி 7 ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in