”நியூசி.எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா” : 35 பந்துகளில் அபிஷேக் சர்மா அதிரடி சதம் : பவர்ப்ளேயில் இந்தியா உலக சாதனை!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என என்ற கணக்கில் வென்று இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.
Indian team delivered impressive performance, winning T20 series against New Zealand 3-0
Indian team delivered impressive performance, winning T20 series against New Zealand 3-0source:thamizhalai,ai generated
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான டி20

நியூசிலாந்து சென்றிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, 2 ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.

நியூசிலாந்து 198 ரன்கள்

இந்தநிலையில், 3வது டி20 போட்டி வெல்லிங்கடனில் நடைபெற்றது. இந்தியா டாஸ் வென்று பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 198/3 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக டேரில் மிட்செல் 89 ரன்கள் எடுத்தார்.இந்தியா சார்பில் அர்ஷ்தீப், அக்‌ஷர் படேல், நிதீஷ் குமார் தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள்.

இந்தியா அபார வெற்றி

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா

இந்தப் போட்டியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 113 ரன்கள் குவித்து அசத்தினார். இது அவருக்கு 4ஆவது டி20 சர்வதேச சதம், மொத்தமாக 11ஆவது டி20 சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சளைக்காத சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமிசன் 2, சான்ட்னர், பிஷ்ஷர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

14 பந்துகளில் அரை சதம், இந்தியா சாதனை

முதல் ஓவரில் மட்டும் 26 ரன்கள் நொறுக்கிய இந்திய அணி வெறும் 2.2 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. இதன்மூலம் 14 பந்துகளில் அதிவேகமாக 50 ரன்களை தொட்ட முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

ஒருபக்கம் அபிஷேக் சர்மா, மறுபக்கம் வைபவ் சூர்யவன்ஷியும் அதிரடியாக பட்டையை கிளப்ப, பவர்பிளேவின் 6 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் எடுத்து பிரம்மிக்க வைத்தது.

இந்திய அணி உலக சாதனை

இதன்மூலம் பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த முதல் அணி என்ற உலக சாதனையையும் இந்திய அணி படைத்தது.

தொடரை கைப்பற்றிய இந்தியா

மொத்தமாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என தொடரை வென்றுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகள் அக்டோபர் 30, நவம்பர்1ம் தேதி நடைபெறுகின்றன.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in