CWG 2026 : ஜூடோவில் அசத்திய இந்தியா : ”அஸ்மிதா டே, ஹர்ஷ் சிங் தங்கம், யாமினி மௌரியா வெள்ளி” : தொடரும் பதக்கவேட்டை.!

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஜூடோவில், இந்தியாவின் ஹர்ஷ் சிங், அஸ்மிதா டெ தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்கள். யாமினி மௌரியா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
India's Harsh Singh, Asmita Dey  dazzled by winning gold medals in judo at  Commonwealth Games
India's Harsh Singh, Asmita Dey dazzled by winning gold medals in judo at Commonwealth Games ai generated
2 min read

காமன்வெல்த் போட்டிகள்

India's Harsh Singh and Asmita Dey have dazzled by winning gold medals in judo at the Commonwealth Games. Yamini Maurya won a silver medal.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா அசத்தி வருகிறது.

ஜூடோ, ஈட்டி எறிதலில் அசத்திய இந்தியா

தடகளம், குத்துச்சண்டை அரையிறுதி, ஜூடோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வெல்லும் முனைப்புடன் களம் கண்டனர். இதில் ஜூடோ, ஈட்டி எறிதல் மற்றும் டெகத்லான் பிரிவுகளில் இந்திய அணி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

பதக்கங்களை குவித்த இந்தியா

இதன் மூலம் இந்திய அணி ஒரே நாளில் 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வாரிக்குவித்தது.

ஜூடோவில் 2 தங்கம், 1 வெள்ளி

குறிப்பாக ஜூடோ விளையாட்டில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இந்திய அணி வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.

இதன் மூலம் இந்தியா 5 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் தனது நிலையை மேம்படுத்தி வருகிறது.

ஜூடோவில் இந்தியா வரலாறு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய ஜூடோ வீராங்கனை அஸ்மிதா டே தங்கம் வென்று சாதனை படைத்தார். மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவின் ஜூடோ இறுதிப் போட்டியில், கனடா நாட்டு வீராங்கனையுடன் அஸ்மிதா பலப்பரீட்சை நடத்தினார்.

தங்கம் வென்ற அஸ்மிதா டே

போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாகச் செயல்பட்ட அஸ்மிதா அபார வெற்றியைப் பதிவு செய்து தங்கம் வென்றார். இதன் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வரலாற்றிலேயே ஜூடோ பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.

ஹர்ஷ் சிங் தங்கம் வென்று சாதனை

ஆடவருக்கான 60 கிலோ எடைப் பிரிவு ஜூடோவின் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஜோசுவா காட்சை எதிர்த்து இந்தியாவின் ஹர்ஷ் சிங் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்ஷ் சிங், ஆஸ்திரேலிய வீரரை வீழ்த்தி, தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வரலாற்றிலேயே ஜூடோ பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆடவர் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

யாமினி மௌரியா வெள்ளி

மகளிர் 57 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை யாமினி மௌரியா, இங்கிலாந்து வீராங்கனையிடம் கடுமையான போராட்டத்திற்குப் பின் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் ஜூடோ விளையாட்டில் மட்டும் இந்தியா 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என 3 பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

டெகத்லான் இந்தியாவுக்கு வெண்கலம்

இதுதவிர, 10 வெவ்வேறு தடகளப் போட்டிகளை உள்ளடக்கிய டெகத்லான் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர், மொத்தம் 7,976 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதன் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வரலாற்றிலேயே டெகத்லான் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைத் தேஜஸ்வின் சங்கர் படைத்துள்ளார்.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in